இலக்கியம்

புத்தகத் திருவிழா 2023 | முத்துகள் 10

செய்திப்பிரிவு

எனது நாடக வாழ்க்கை! (மறுபதிப்பு)
#
அவ்வை டி.கே.சண்முகம்
நக்கீரன் வெளியீடு
விலை: ரூ.475

வெள்விரி
#
சீ. பத்திநாதன் பர்ணாந்து
விடியல் பதிப்பகம்
விலை: ரூ. 500

தீடை
#
ச.துரை
சால்ட் பதிப்பகம்
விலை: ரூ.180

சாப பூமி
#
பண்டி நாராயணஸ்வாமி
தமிழில்: இளம்பாரதி
சாகித்திய அகாதெமி வெளியீடும்
விலை: ரூ.375

கொள்ளிடம்
#
ராஜா வாசுதேவன்
தழல் பதிப்பகம்
விலை: ரூ.360

பன்னாட்டுக் குற்றங்கள்
#
இராமநாதன் நாகமணி
யாவரும் பதிப்பகம்
விலை: ரூ. 345

புகழ்மிக்க விசாரணைகள்
#
ஜே.பால்பாஸ்கர்
பரிசல் புத்தக நிலையம்
விலை: ரூ.240

நவமார்க்சிய வழியில்
திராவிடத் தமிழ்ச் சிந்தனைகள்
# தமிழவன்
எதிர் வெளியீடு
விலை: ரூ.400

சிந்துவெளி எழுத்து
#
அஸ்கோ பர்போலா
தமிழில்: வி.நடராஜ்
தமிழோசை பதிப்பகம்
விலை: ரூ.150

புகழப்பட்டவர்: நபிகள் நாயக வரலாறு
#
அத்தாவுல்லா
இஸ்லாமிய இலக்கியக் கழக வெளியீடு
விலை: ரூ.1,000

சிறப்பு

நகுலாத்தை (நாவல்)
யதார்த்தன்
வடலி வெளியீடு
விலை: ரூ.750
புத்தகக் காட்சி அரங்கு எண்: 378, 379

யதார்த்தன் என்கிற பெயரில் எழுதும் பிரதீப் குணரட்ணம், இலங்கையில் யாழ்ப்பாணத்திலுள்ள சரசாலை கிராமத்தில் பிறந்தவர் (1993). போரால் விளைந்த துயர்களைத் தின்று செரித்த ஈழ நிலம் ஒன்றின் கதையான ‘நகுலாத்தை’, ‘தொல் தெய்வங்களின் கருணையும் உக்கிரமும் உள்ளுறைந்திருக்கும் கதைகளும் மனிதர்களும் கொண்டு எழுதப்பட்டிருக்கும்’ யதார்த்தனின் முதல் நாவலாகும்.

செம்மை

மரணத்தின் கதை:
நக்சல் மண்ணில் கனவுகளும் நிராசைகளும்
ஆசுதோஷ் பரத்வாஜ்
தமிழில்: அரவிந்தன்
காலச்சுவடு பதிப்பகம்
புத்தகக் காட்சி அரங்கு எண்: E 5
விலை: ரூ.430

இதழாளரும் புனைகதை எழுத்தாளருமான ஆசுதோஷ் பரத்வாஜ் மத்திய இந்தியாவில் மாவோயிஸ்ட் பிரச்சினை குறித்து செய்திக் கட்டுரைகளை எழுதுவதற்காக காடுகளுக்குச் சென்றுவந்த அனுபவங்களின் அடிப்படையில் இந்த நூலை எழுதியுள்ளார். அரசுக்கு எதிரான போர் என்னும் பெயரில் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடும் மாவோயிஸ்ட் அமைப்பினருக்கும் ராணுவம், காவல் துறை உள்ளிட்ட பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான மோதல், இதில் சிக்கிக்கொண்ட அப்பாவி மக்களின் துயரம், அந்தப் பகுதிகளில் வாழும் பழங்குடி மக்களின் வாழ்வியல் ஆகியவை இந்த நூலில் பதிவாகியுள்ளன.

புனைவு என்றோ அல்புனைவு என்றோ வகைப்படுத்திவிட முடியாத வடிவத்தில் இந்த நூலை எழுதியிருப்பதாகக் கூறியிருக்கிறார் ஆசுதோஷ். மூத்த இதழாளரும் எழுத்தாளருமான அரவிந்தன் இந்த நூலை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.

SCROLL FOR NEXT