இலக்கியம்

நல்வரவு: வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு

செய்திப்பிரிவு

வள்ளலாரைப் பற்றி முழுமையாகப் புரிந்துகொள்ளப் படாததற்குக் காரணம், அவரது வாழ்க்கை வரலாறு முழு அளவில் வெளிவராததுதான். அதனால் அதை எளிய முறையில் கூறிய ம.பொ.சிவஞானத்தின் நூலின் மறுபதிப்பு இது.

வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு,
ம.பொ.சிவஞானம்,
முல்லை பதிப்பகம்,
விலை: ரூ.120, தொடர்புக்கு: 9840358301

ராஜஸ்தான் மாநிலத்தைப் பற்றிய ஒரு முழுமையான அபிப்பிராயத்தை உருவாக்கிக்கொள்ள இந்த நூல் உதவும். நிலத்துடன் அம்மாநிலத்தின் பண்பாட்டையும் நூலாசிரியர் வாசகர்களுக்குச் சொல்கிறார்.

ராஜஸ்தான் ஒரு பார்வை,
லக்‌ஷ்மி ரமணன்,
ஆனந்தாயீ எண்டர்பிரைஸ்
விலை: ரூ.300, தொடர்புக்கு: 9367781348

சங்க நூல்களின் முதல் பகுதியாகிய பத்துப்பாட்டை எளிய, இனிய நடையில் உரைநடையாக இந்த நூலில் நாராயண வேலுப்பிள்ளை தந்துள்ளார். வாசகர்கள் அனுபவித்துணர வேண்டிய கருத்துகளைக் கொண்டது பத்துப்பாட்டு.

சங்க இலக்கியம் வழங்கும் பத்துப்பாட்டு,
எம்.நாராயண வேலுப்பிள்ளை,
நர்மதா பதிப்பகம்
விலை: ரூ.95, தொடர்புக்கு: 98402 26661

எளிய வார்த்தைக் கட்டுமானத்தில் நல்ல அனுபவம் மிக்க கவிதைகளை நாகநந்தினி உருவாக்கியுள்ளார். பெண்களின் தனித்துவமான அம்சங்கள் இதில் வெளிப்பட்டுள்ளன.

மெளனம் துறக்கும் பெண்மை, நாகநந்தினி, ஓவியா பதிப்பகம், விலை: ரூ.100
தொடர்புக்கு: 7667557114

இன்றைய காலகட்டத்தில் கடன் இல்லாமல் நடுத்தர வாழ்க்கையைக் கொண்டு செல்ல முடியாத சூழல். இந்நிலையில், அந்தக் கடன் குறித்த நம் சந்தேகங்களுக்கான விடையாக இந்த நூல் இருக்கிறது.

கடன் தீதும் நன்றும்
சோம.வள்ளியப்பன்,
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
விலை: ரூ.250, தொடர்புக்கு: 044 42009603

SCROLL FOR NEXT