‘ஒவ்வொரு பக்கத்தையும் படித்து முடிக்க அஞ்சு செகண்ட்தான் ஆகிறது என்றாலும், கதையின் பாதிப்புகள் அடுத்த பக்கத்துக்குப் போகவிடாமல் அஞ்சு நிமிஷம் வரை பிடித்து வைத்துக்கொள்கிறது’ என்று க்ரைம் எழுத்தாளர் ராஜேஷ்குமார் இந்தத் தொகுப்பின் கதைகளைப் பற்றிக் கூறியிருக்கிறார்.
வாழ்க்கை என்பது சிறுசிறு நிகழ்வுகளால் ஆனது. அந்த நிகழ்வுகளில் இருக்கும் கதைகளை மட்டுமல்லாமல் பார்வைக் கோணங்களையும் கண்டுகொள்வது சசித்ராவின் சிறப்பு. எடுத்துக்காட்டாக ‘அறைதல்’ என்ற தலைப்பில் ஒரு கதை: "சொல்லச் சொல்லக் கேக்காம என் பொம்மையை ஒடைச்சிட்ட இல்ல. உன்னை என்ன செய்யறேன் பாரு!" கோபத்துடன் தன் தங்கையை அடிக்க ஓங்கிய ஐந்து வயது மகனின் கையை இறுக்கிப் பிடித்தாள் அம்மா. அவளது கணவனைப் போல, பெண்ணை அடிக்கும் இன்னொரு ஆண் இந்த வீட்டிலிருந்து வர மாட்டான் என்று புன்னகைத்தது எதிர்காலம்!
அஞ்சு செகண்ட் அட்டகாசம்
டாக்டர் சசித்ரா தாமோதரன்
வெளியீடு:
டிஸ்கவரி புக் பேலஸ்,
சென்னை-600 078
விலை: ரூ.220
தொடர்புக்கு: 99404 46650