சூஃபி மரபும் தமிழ்ச் சித்தர் மரபும் சந்தித்துக்கொண்டதன் விளைச்சல்தான் குணங்குடியாரின் பாடல்கள். அவரது பாடல்கள் தமிழகம் எங்கும் ஒலித்த காலம் உண்டு. மத பேதங்களைத் தாண்டி, சமரச வாழ்வை நோக்கி அழைத்துச் செல்பவை குணங்குடியாரின் பாடல்கள். அந்தப் பாடல்களுக்குப் பொருத்தமான அறிமுக உரையும் குறிப்புகளும் வழங்கி குணங்குடியாரின் உலகத்துக்குள் செல்வதற்கு கவிஞர் அப்துல் ரகுமான் இந்த நூலில் உதவியிருக்கிறார்.
குணங்குடியார் பாடற்கோவை
குறிப்புரை: கவிக்கோ அப்துல் ரகுமான்
யுனிவர்சல் பப்ளிஷர்ஸ்
விலை: ரூ.220