மாயூரம் வேதநாயகம் தொடங்கி தற்போதைய எழுத்தாளர்கள் வரையில் மொத்தம் 131 நாவல்களைப் பற்றிய அறிமுகமாக அமைந்துள்ள பெருந்தொகுப்பு இது. தமிழ் நாவல் கடந்துவந்த பாதையில் அதன் உள்ளடக்கமும் சித்தரிப்புகளும் அடைந்த மாற்றங்களை மட்டுமல்ல; சமூக, பண்பாட்டு மாற்றங்களையும் எடுத்துக்காட்டுகிறது இந்நூல். குடும்ப வெளியில் பெண்களும் சமூக வெளியில் ஒடுக்கப்பட்டவர்களும் காலம்தோறும் எவ்வாறு நடத்தப்பட்டுவருகிறார்கள் என்பதன் இலக்கியப் பதிவுகள். வெளிப்படையாக சில மாற்றங்கள் நடந்திருந்தாலும் உள்ளுக்குள் இன்னும் அந்த ஏற்றத்தாழ்வுகள் நீடிக்கவே செய்கின்றன. பிரபலம் பெறாத சில முக்கிய எழுத்தாளர்களையும் கவனப்படுத்துகிறது இந்தத் தொகுப்பு.
தமிழ்ப் புதினங்களில் பெண்கள் - ஆண்கள் - சாதிகள்
எம்.ஆர்.ரகுநாதன்
அலைகள் வெளியீட்டகம்
விலை: ரூ.900 98417 75112