இலக்கியம்

‘வாழையூர் குணா’ முதல் ‘கடவுள்களின் அடிமைகள்’ வரை | நூல் வரிசை

செய்திப்பிரிவு

வாழையூர் குணா
சிறுகதைகள்
நியூ செஞ்சுரி
புக் ஹவுஸ்
விலை ரூ.160
தொடர்புக்கு: 044-26251968

பல்வேறு விஷயங்கள் குறித்து ஆசிரியர் எழுதியுள்ள 18 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு.

சுவிஸ் தமிழ் எழுத்தாளர்கள்
சண் தவராஜா
இனிய நந்தவனம் பதிப்பகம்
விலை ரூ.200
தொடர்புக்கு: 9443284823

சுவிட்சர்லாந்தில் இருந்துகொண்டு நீண்ட காலமாக எழுதி வரும் 12 எழுத்தாளர்களை ஆவணப்படுத்தும் விதமாகத் தொகுக்கப்பட்டுள்ள நூல் இது.

ஏஐ எனும் நான்
ஹரி பிரவின்
சந்தியா பதிப்பகம்
விலை ரூ.130
தொடர்புக்கு: 98409 52919

ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் ஆரம்பம், எதிர்கால பயணம், அதனால் ஏற்படும் வேலைவாய்ப்பு மாற்றங்கள், அதன் இருண்ட பக்கங்கள் உள்ளிட்ட விஷயங்களை பேசும் நூல் இது.

விதிமுறைகளற்ற ஆட்டங்கள்
கவியோவியத் தமிழன்
பி4புக்ஸ் வெளியீடு
விலை ரூ.230
தொடர்புக்கு: 9042461472

கிராமத்து கதைமாந்தர்களை உயிர் சித்திரங்களாகக் கொண்டு புனையப்பட்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு.

கடவுள்களின் அடிமைகள்
கேத்ரின் மேயோ
தமிழாக்கம்: சமரன்
பரிவாதினி பதிப்பகம்
விலை ரூ.180
தொடர்புக்கு: 9092559307

‘இந்திய தாய்’ எனும் ஆங்கில நூல் மூலம் பரபரப்பை ஏற்படுத்திய கேத்ரின் மேயோவின் இரண்டாவது நூலின் தமிழாக்கம் இது. இந்துக்களின் மத நம்பிக்கைகள் பழக்க வழக்கங்கள் பற்றி இந்நூல் பேசுகிறது.

SCROLL FOR NEXT