சென்னை: தமிழக அரசின் 2025-ம் ஆண்டுக்கான வைக்கம் விருது எழுத்தாளர் தேன்மொழி சவுந்தரராஜனுக்கு வழங்கப்பட உள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: நடப்பு ஆண்டுக்கான வைக்கம் விருதை தேன்மொழி சவுந்தரராஜனுக்கு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
அமெரிக்காவில் வசிக்கும் தேன்மொழி சவுந்தரராஜன், இந்திய அமெரிக்க ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமை ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் ஆவார்.
அவரது பெற்றோர் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர்கள். அவருக்கு ரூ.5 லட்சத்துக்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் தங்க முலாம் பூசிய பதக்கம் முதல்வரால் வழங்கப்படும்.