நீர் மிதக்கும் நெடு வாய்க்கால்
அய்யனார் ஈடாடி
வேரல் புக்ஸ்
விலை: ரூ.170
தொடர்புக்கு: 9578764322
கிராமத்து அனுபவங்களின் அடிப்படையில், கூர்மையான மொழி நடையுடன் எழுதப்பட்டுள்ள சுவாரஸ்யமான கவிதைகளைக் கொண்ட தொகுப்பு.
விவேகானந்தர் வேண்டிய 100 இளைஞர்களுள் நீங்களும் ஒருவரா?
சுவாமி விமுர்த்தானந்தர்
வானதி பதிப்பகம், விலை: ரூ.150
தொடர்புக்கு: 044-24342810
விவேகானந்தரின் சொற்பொழிவுகளை அடிப்படையாகக் கொண்டு அவர் ஒரு தீர்க்கதரிசி என்பதை நிறுவும் கட்டுரைகளைக் கொண்ட நூல் இது. அதற்கு அவருடைய வாழ்க்கைச் சம்பவங்களைச் சான்றுகளாகக் காட்டியிருக்கிறது.
உயர் தனிச் செம்மொழி
கவிதாசன்
குமரன் பதிப்பகம், விலை: ரூ.260
தொடர்புக்கு: 9444013999
தமிழின் சிறப்புகளைக் கூறும் நூல்.
தகவல் தொடர்பு மொழி, வணிக மேலாண்மை மொழி, பல்லுயிர் மொழி, மருத்துவ மொழி, அன்பின் மொழி, ஆன்மிகத்தின் மொழி என பல தலைப்புகளில் எழுதப்பட்டுள்ள கட்டுரைகளின் தொகுப்பு.
உலகப் புகழ்பெற்ற
நாட்டுப்புறவியல் கட்டுரைகள்
ஆ.திருநாகலிங்கம்
சகசானந்தா பதிப்பகம்
விலை: ரூ.150
தொடர்புக்கு: 9486907860
அமெரிக்க நாட்டுப்புறவியல் அறிஞர்கள் எழுதியுள்ள மூன்று கட்டுரைகளின் மொழிபெயர்ப்பு இந்நூல். நாட்டுப்புறவியலைத் தெரிந்துகொள்ள விரும்புவோர், நாட்டுப்புறவியல் மாணவர்களுக்கு பயன்படக்கூடிய
வகையில் எழுதப்பட்டுள்ளது.
பெருந்தலைவர் காமராஜர் பாதை
என்.எஸ்.வி.சித்தன்
சக்தி மசாலா குழுமம்
தொடர்புக்கு:9952920801
நாடாளுமன்ற உறுப்பினராகவும் சட்டப்பேரவை உறுப்பினராகவும் பணியாற்றிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த என்.எஸ்.வி.சித்தனின் வாழ்க்கை அனுபவங்கள் இத்தொகுப்பு. பத்திரிகையாளர் சுந்தரபுத்தன் தொகுத்துள்ளார்.