இலக்கியம்

‘நற்சிந்தனை நாற்பது’ முதல் ‘இந்திய இலக்கியச் சிற்பிகள்’ வரை | நூல் வரிசை

செய்திப்பிரிவு

நற்சிந்தனை நாற்பது
ப.திருமலை
மக்கள் நலப் பதிப்பகம்
விலை ரூ.180
தொடர்புக்கு: 98410 25280

நற்சிந்தனை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, ஒற்றுமை, ஒழுக்கம், உண்மை, மனிதநேயம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆசிரியர் எழுதியுள்ள கட்டுரைகள்.

நாவல் ஆய்வு முறை
பெ.சுப்பிரமணியன்
காவ்யா
விலை ரூ.160
தொடர்புக்கு: 9840480232

நாவலை எப்படி ஆராய வேண்டும் என்பதை மரபாகத் திகழும் கோட்பாடுகளின் வழி விவரிக்கிறது இந்நூல்.

பேரறிஞர் அண்ணா
திருமலை விசாகன்
அருணா பப்ளிகேஷன்ஸ்
விலை ரூ.250
தொடர்புக்கு: 9444047790

முன்னாள் முதல்வர் அண்ணாவின் அரசியல், திரைத்துறை குறித்து பல்வேறு தலைப்புகளில் எழுதப்பட்டுள்ள கட்டுரைகளின் தொகுப்பு.

வாய்ப்புகள் வெற்றிகளாகட்டும்
என்.பத்ரி
புஸ்தகா டிஜிட்டல் மீடியா
விலை ரூ.190
தொடர்புக்கு: 7418555884

வாழ்வில் அரிதாக கிடைக்கும் வாய்ப்புகளை முறையாகப் பயன்படுத்திக் கொண்டால் உன்னத நிலைக்கு வர முடியும் என்பதை பல்வேறு கட்டுரைகளின் மூலம் கூறியிருக்கிறார் ஆசிரியர்.

இந்திய இலக்கியச் சிற்பிகள்
கா.மீனாட்சி சுந்தரம்
சிற்பி பாலசுப்பிரமணியம்
சாகித்ய அகாதமி
விலை ரூ.100
தொடர்புக்கு: 044-24311741

பாரதியார் பற்றி கல்வியுலகில் முதல் ஆய்வு நூல் உள்பட பல்வேறு திறனாய்வு நூல்களை எழுதியுள்ள பேராசிரியர் கா.மீனாட்சி சுந்தரத்தின் படைப்புகள் பற்றிய தொகுப்பு.

SCROLL FOR NEXT