இலக்கியம்

‘கிறிஸ்துவின் சாயல்’ முதல் ‘எனது முகவரிகள்’ வரை | நூல் வரிசை

செய்திப்பிரிவு

கிறிஸ்துவின் சாயல்
தமிழில்: சேவியர்
சந்தியா பதிப்பகம்
விலை: ரூ.390
தொடர்புக்கு : 9840952919

பைபிளுக்கு அடுத்தபடியாக உலக அளவில் அதிகம் வாசிக்கப்படும் கிறிஸ்தவ நூல், தாமஸ் எ கெம்பிஸ் எழுதிய ‘இமிடேஷன் ஆஃப் கிறிஸ்து’ என்று கூறப்படுகிறது. இந்நூல் 95-க்கும்மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. தமிழில் ‘கிறிஸ்துவின் சாயல்’ என்ற பெயரில் இந்நூலை மொழி பெயர்த்துள்ளனர்.

அறிவியலாளரின் அமெரிக்கப் பயணம்
நா.சு.சிதம்பரம்
நெல்லி பதிப்பகம்
விலை: ரூ.1400
தொடர்புக்கு : 9840221753

ஆசிரியரின் அமெரிக்கப் பயண அனுபவங்கள் பற்றிய கட்டுரைகள், அழகழகான ஒளிப்படங்களுடன் இடம்பெற்றுள்ளன.

உலக வரலாற்றில்
வி.ஜி.சந்தோசம்
கோ.பெரியண்ணன்
வனிதா பதிப்பகம்
விலை: ரூ.160
தொடர்புக்கு: 9884441941

தொழிலதிபர் வி.ஜி.சந்தோசத்தின் வாழ்க்கைக் கதையையும், விஜிபி குழுமம் உருவான கதையையும் பேசுகிறது இந்நூல்.

அங்காயா வம்சம்
கண்மணி
இளா வெளியீட்டகம்
விலை: ரூ.350
தொடர்புக்கு: 9499041024

அங்கம்மா என்ற பெண், சமூகத்தை எதிர்கொண்டு குழந்தைகளைப் போராடி வளர்க்கும் கதையை கொண்ட நாவல்.

எனது முகவரிகள்
முனைவர் இரா.காளீஸ்வரன்
மாற்று ஊடக மையம்
விலை: ரூ.100
தொடர்புக்கு: 9094799688

புராணக் கதைகளை, சமூக நடப்புகளைக் கதைகளாக, கதைப் பாடல்களாகப் பாடிவரும் 13 நாட்டுபுறக் கலைஞர்களின் கதைகளை, அவர்களோடு வாழ்ந்துபெற்ற அனுபவத்தையே கதைகளாக்கியுள்ளார் முனைவர் இரா.காளீஸ்வரன்.

கலைக்காகவே தன்னை அர்ப்பணித்துள்ள இத்தகைய நாட்டுப்புறக் கலைஞர்களின் வாழ்க்கைத் தரம் சிறிதளவேனும் மேம்பட ஏதாவது செய்ய வேண்டு மென்கிற உந்துதலை உண்டாக்குவதே இந்நூல் ஆற்றுகிற ஆக்கப்பூர்வமான வினையாகும்.

SCROLL FOR NEXT