இலக்கியம்

சொற்களின் களஞ்சியம்

செய்திப்பிரிவு

தெலங்கானா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளின் பேச்சு வழக்கு, கலாச்சாரம், இலக்கியம் ஆகியவற்றை ஆவணப்படுத்தும் வகையில் ‘தெலங்கானா அகராதி’ என்கிற திட்டத்தை அம்மாநில சாகித்ய அகாடமி முன்னெடுத் திருக்கிறது. மொழிவாரி மாநிலமாகத் தெலங்கானா இருந்தாலும் அதன் வெவ்வேறு பகுதிகளில் புழங்கும் மொழியின் நடையும் உச்சரிப்பும் தனித்தன்மை வாய்ந்தவையாக இருக்கின்றன.

இவை அனைத்தையும் ஆவணப் படுத்துவதன் மூலம் பழங்காலப் பேச்சு வழக்கையும் நிகழ்கால வழக்கையும் மக்கள் அறிய முடியும். சொற்கள் சேகரிப்புக்கும் வகைப்படுத்தலுக்கும் மொழியியல் அறிஞர்களின் உதவியோடு அறிவியல் முறைகளைப் பயன்படுத்தவிருப்பதாகத் தெலங்கானா சாகித்ய அகாடமி தெரிவித்திருக்கிறது.

மக்கள் வசிக்கும் நிலத்துக்கு ஏற்ப மொழியின் உச்சரிப்பும் நடையும் காலந்தோறும் மாறிவருவதை அறிவதற்கான கையேடாகவும் இந்த அகராதி அமையும்.

சிறார் நூல்கள்: பிரிட்டன் எழுத்தாளர் டோரதி கூம்சன் புதிய வெளியீடான ‘பீச் ஹட் 512’, ஒரு மர்ம நாவல். கடற்கரைக் குடில் ஒன்றில் கிடக்கும் சடலத்தை வைத்துப் பின்னப்பட்ட கதை இது. 13 வயதில் எழுதத் தொடங்கிய டோரதியின் நாவல்கள், 20 லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்றுள்ளன. 30 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

இவரது மூன்று நாவல்கள் தொலைக்காட்சித் தொடராக வெளிவந்துள்ளன. சிறார் நூல்கள் குறைந்துவருவது குறித்த தன் கவலையைப் பதிவுசெய்திருக்கும் இவர், குழந்தைகள் மத்தியில் பரிவுணர்வு மேம்பட வேண்டு மானால் ஏராளமான சிறார் நூல்கள் வெளியாக வேண்டும் என்கிறார்.

SCROLL FOR NEXT