இலக்கியம்

நூல் நயம் | வாழ்நாள் இலட்சியமாக ஒரு நூல்

செய்திப்பிரிவு

உலகத் தமிழ் ஓசை என்கிற மாத இதழை நடத்தியவர் பேராசிரியர் சி.எஸ்.எஸ்.சோமசுந்தரனார். இத்தகைய முயற்சிகளால் நிகழும் பொருளாதார இழப்புக்கு இவரும் விதிவிலக்கல்ல. ‘உலகத் தமிழர் கலைக்களஞ்சியம்’ நூலை வெளியிடுவது அவரது வாழ்நாள் லட்சியமாக இருந்தது.

நூல் வெளிவரும் முன்பே சோமசுந்தரனார் இறந்துவிட்டார். தனது பெருங்கனவான இந்த நூலை வெளிக் கொண்டுவர வேண்டும் என அவரால் அன்புடன் பணிக்கப்பட்ட இ.கே.தி.சிவகுமாரைப் பதிப்பாளராகக் கொண்டு இந்த நூல் இறுதியில் 2006இல் வெளிவந்தது. அது மீண்டும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

தமிழில் தனிமனிதர் ஒருவரால் வெளியிடப்பட்ட கலைக்களஞ்சியம் (என்சைக்ளோபீடியா) ‘உலகத் தமிழர் கலைக்களஞ்சிய’ மாகவே இருக்க வாய்ப்பிருக்கிறது. முதன்மையான தமிழ் நூல்கள், தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள், தேசத் தலைவர்கள் குறித்த சுருக்கமான வரலாறு இதில் தொகுக்கப்பட்டிருக்கின்றன.

அதில் மட்டும் சோமசுந்தரனார் மனநிறைவு கொண்டுவிடாமல் தமிழர் இசைவிழா, தமிழர் வாணிகம், தமிழரின் நம்பிக்கைகள், பசிபிக் கடலில் தமிழ்க் குடியரசு போன்ற தலைப்புகளிலும் பயனுள்ள தகவல்களைத் தந்திருக்கிறார். சங்க காலத்தில் ‘புளிஞர்’ எனக் குறிக்கப்பட்ட மக்கள்தான் இன்று பளிங்கர் எனப்படுவதாக ‘பழகு தமிழ்’ என்னும் இயலில் இடம்பெறும் செய்தி ஓர் உதாரணம்.

பதிப்பகச் செம்மல் ச. மெய்யப்பன் குறித்து தமிழண்ணல் பெயரில் வந்துள்ள கட்டுரை போன்றவை வேறெங்கும் வாசிக்கக் கிடைக்காதவை. சில சமகால ஆளுமைகளின் பணிகள் குறித்தும் வாசகர்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்கிற சோமசுந்தரனாரின் ஆர்வத்தைப் புலப்படுத்தும் வகையில், அவர்கள் குறித்த இயல்களும் உள்ளன. - ஆனந்த் செல்லையா

உலகத் தமிழர் கலைக்களஞ்சியம்
அமரர் சி.எஸ்.எஸ்.சோமசுந்தரனார்;
பதிப்பாசிரியர்: இ.கே.தி.சிவகுமார்;
அன்பு பதிப்பகம்
விலை: ரூ. 2000;
தொடர்புக்கு: 73389 84668

குழந்தைகளை ஈர்க்கும் நூல்: பன் ஒரு வாகனத்தை வாங்க விரும்புகிறது. ஆனால், வாகனம் விற்கும் அணில், 35 பருப்புகளைக் கொண்டுவந்தால், அந்த வாகனத்தைத் தருவதாகச் சொல்கிறது. பன்னுக்கு 35 பருப்புகளைக் கொண்டுவந்து எப்படிக் கொடுப்பது என்று தெரியவில்லை. மரத்தில் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த ஆந்தை, ஒரு யோசனை சொல்கிறது.

அந்த யோசனை என்ன, பன் அதை எப்படிச் செயல்படுத்தியது, வாகனத்தை வாங்க முடிந்ததா என்பதை எல்லாம் எளிய ஆங்கிலத்தில் சுவாரசியமாகச் சொல்லியிருக்கிறார் கிருத்திகா. அழகான ஓவியங்களுடன் வழுவழுப்பான கெட்டித் தாளுடன் குழந்தைகள் ஈர்க்கும் விதத்தில் அமைந்திருக்கிறது, இந்த நூல்.

Bun and the Magic Jar
எஸ்.கிருத்திகா
Lore Quill Tales
விலை: ரூ.299

தூரிகையில் விரியும் வரலாறு: மனிதகுல வரலாற்றில் மாபெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது ரஷ்யப் புரட்சி. 1917-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நடைபெற்ற இந்தப் புரட்சியானது உலகிலுள்ள உழைக்கும் மக்களுக்கெல்லாம் புதிய உத்வேகத்தையும் நம்பிக்கையையும் அளித்தது. ஜார் மன்​னனுக்கு எதி​ராக லெனின் தலை​மை​யில் செஞ்​சேனை​யில் இணைந்த தொழிலாளி வர்க்​கம், புதிய விடியலுக்​கான புரட்​சிக்கு வித்​திட்​டது.

‘மா​காளி பராசக்தி உருசிய நாட்​டினில் / கடைக்​கண் வைத்​தாள்! அங்கே / ஆகா என்​றெழுந்​தது பார் யுகப்​புரட்​சி! / கொடுங்​கோலன் அலறி வீழ்ந்​தான்!’ என்று 1921-இல் ‘சுதேச மித்​திரன்’ இதழில் நம் பார​தியை எழுத வைத்​ததும் இப்​புரட்​சி​யே. ரஷ்யப் புரட்சி நடை​பெற்று ஒரு நூற்​றாண்​டினைக் கடந்​திருக்​கும் வேளை​யில், புரட்சி நடை​பெற்ற போது ரஷ்​யா​வில் இருந்​த​படி நேரடியான செய்​தி​களை எழு​திய அமெரிக்​கப் பத்​திரி​கை​யாளர் ஜான் ரீட் எழு​திய ‘உலகை உலுக்​கிய பத்து நாட்​கள்’ நூலை​யும், எழுத்​தாளர் ரைஸ் வில்​லி​யம்ஸ் எழு​திய ‘நேரில் கண்ட ருஷ்யப் புரட்​சி’ நூலை​யும் முதன்மை ஆதா​ர​மாக் கொண்​டு,

தூரி​கை​யின் வழியே காட்​சிகளாக விளக்​கு​கிறது இந்​நூல். கவிஞரும் ஓவியரு​மான ஸ்ரீரசா, சின்​னச் சின்​னச் சித்​திரங்​களின் மூல​மாகப் புரட்​சி​யின் தாக்​கத்தை நம் மனங்​களுக்​குள் கடத்​திப்​போகிறார். இந்​நூலில் அடர்​வண்​ணங்​களி​னால் தீட்​டப்​பட்ட பல நூறு ஓவி​யங்​கள், அன்​றைய நாளில் பாட்​டாளி வர்க்​கம் அனுப​வித்த இன்​னல்​களை​யும், உரிமை​களை​யும், உணர்​வு​களை​யும் பெற புரட்சி ஒன்றே தீர்வு என்​கிற இலக்கை நோக்கி உழைப்​பாளி மக்​கள் களமிறங்​கியதை​யும், புரட்​சி​யின்​போது நடை​பெற்ற நிகழ்​வு​களை​யும் ஒரு கதைக்​கான கூறுகளோடு சுவாரசி​ய​மாகச் சொல்​லிச்​செல்​கின்​றன. இன்​னும் எத்​தனை நூற்​றாண்​டு​களாலும் உலக வரலாற்​றில் சிவப்பு நட்​சத்​திர​மாக மின்​னிக்​கொண்​டிருக்​கும் ரஷ்யப் புரட்​சியை அனை​வரும் அறிந்​து​கொள்​ள​வும், படித்​துத் தெளிவுற​வும் இந்​நூல் பயனளிக்​கும் வகை​யில் அமைந்​துள்​ளது. - மு.முருகேஷ்

மானுடம் கண்ட மகத்தான புரட்சி - வரலாறு & சித்திரங்கள்:
ஸ்ரீரசா
காலம் வெளியீடு,
மதுரை.
விலை: ரூ. 400
தொடர்புக்கு: 94430 78339

SCROLL FOR NEXT