கனவு மெய்ப்பட வேண்டும்
சுபா
தங்க தாமரை பதிப்பகம்
விலை ரூ.180
தொடர்புக்கு: 7305776099
சுயமுன்னேற்ற கட்டுரைகளைக் கொண்ட நூல். ஒவ்வொரு கட்டுரையிலும் வரும் குட்டிக் கதைகள் சுவாரசியமாக இருக்கின்றன.
அரசியல் மற்றும் பொருளாதாரம்
ஓர் அரிச்சுவடி
வீ.பழனி
அஆஇ பதிப்பகம்
விலை ரூ. 40
தொடர்புக்கு: 6381648023
அரசியல் மற்றும் பொருளாதாரத்தை அறிந்து கொள்வதற்கான கட்டுரைகளைக் கொண்ட தொகுப்பு.
குறும்பா
முனைவர் ஜோ.பிரேமா கிறிஸ்டி
ஓவியா பதிப்பகம்
விலை ரூ. 150
தொடர்புக்கு : 7667557114
அழகான வடிவமைப்புடன் வந்திருக்கிற ஹைக்கூ கவிதைகளைக் கொண்ட புத்தகம்.
சிறப்புக் குழந்தைகளின் வளர்ச்சியில்
பராமரிப்பாளர்களின் பங்கு
க.சண்முகவேலாயுதம்
வாழ்க வளமுடன் பதிப்பகம்
விலை ரூ.200.
தொடர்புக்கு: 9444022930
சிறப்புக் குழந்தைகளைப் பராமரிப்பவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், அதை அவர்கள் எப்படிச் சமாளிக்கிறார்கள் என்பது குறித்து இந்நூல் விளக்குகிறது.
ஜி.எஸ்.டி பற்றி அதிகம் தெரிந்து கொள்ளுங்கள்
சு.செந்தமிழ்ச் செல்வன்
மணிமேகலைப் பிரசுரம்
விலை ரூ.600
தொடர்புக்கு: 9176451934
ஜி.எஸ்.டி பற்றி பாமர மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எளிய முறையில் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது. வணிகர்கள், மாணவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.