இலக்கியம்

அறிவியல் ஆயுதம் | நம்  வெளியீடு

செய்திப்பிரிவு

அறிவியல் என்றாலே கண்டு பிடிப்புகள் எனச் சுருக்கிப் புரிந்து கொள்ளலாகாது. அனைத்தையும் அறிவியல்பூர்வமாக அணுகி, அலசி, ஆராய்வது அறிவியலின் முக்கிய பண்பாகும். புதிய கண்டுபிடிப்புகள் தலையெடுக்க இந்த பண்புதான் அத்தியாவசியமானதும் கூட. இந்தக் கண்ணோட்டத்தில், மாணவர்களுக்கு அறிவியல் மனப்பான்மையை ஊட்ட, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் பள்ளி நாளிதழான ‘வெற்றிக்கொடி’யில் எழுதப்பட்ட தொடர்தான், ‘புதுமை புகுத்து’.

அறிவியல் என்பது நிலையான ஒரு முடிவு அல்ல; அது தொடர்ந்து முன்னேறிக்கொண்டிருக்கும், ஒரு வளர்ந்து வரும் அறிவின் பயணம். இந்தப் பயணத்தில் புதிய கண்டுபிடிப்புகளும், ஆராய்ச்சிகளும் தினமும் உருவாகிக்கொண்டே இருக்கின்றன. இந்தியா முழுவதும் உள்ள தமிழ் வாசகர்களுக்கு நவீன அறிவியலின் சுவாரஸ்யமான ஆய்வுகளை எளிய தமிழில் எடுத்துரைக்கும் ஒரு முயற்சியாக “புதுமை புகுத்து” என்ற இந்தத் தொடர் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் பிரசுரமானது.

பள்ளிகளில் அறிவியல் கற்பிக்கப்படும் முறை பெரும்பாலும் கடந்த காலத்திய கண்டுபிடிப்புகளை மட்டுமே மையமாகக் கொண்டிருக்கிறது. ஐன்ஸ்டீன், நியூட்டன், கலிலியோ போன்றவர்களின் காலத்திய அறிவியல் பற்றி நாம் அறிந்து கொள்கிறோம்.

ஆனால், இன்றைய அறிவியல் என்ன? உலகம் முழுவதும் உள்ள ஆராய்ச்சி மையங்களில் இப்போது என்னென்ன புதுமைகள் நிகழ்கின்றன? இளைய தலைமுறையினரும், அறிவியல் ஆர்வலர்களும் இந்தக் கேள்விகளுக்கு விடை காண வேண்டும் என்ற துடிப்போடு தான் இந்தத் தொடர் உருவாக்கப்பட்டது.

நவீன அறிவியல் ஆராய்ச்சிகளின் பரந்த உலகைத் தமிழ் மக்களுக்கு எளிய முறையில் விளக்குவதே இதன் முக்கிய நோக்கம்.தமிழ்நாட்டின் தற்போதைய மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் எழுதிய இந்தத் தொடரின் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு, இப்போது ‘இந்து தமிழ் திசை’ பதிப்பகத்தின் சார்பில் நூலாக வெளிவந்துள்ளது.

அறிவியல் கண்ணோட்டத்தை வளர்க்கும் பணியில் ஓர் ஆயுதம் போல் திகழும் இந்தப் புத்தகத்தை ஆசிரியர்கள், மாணவர்கள் மட்டுமின்றி அறிவியல் கற்றலில் ஆர்வம் உள்ள அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டும்.

புதுமை புகுத்து
த.வி. வெங்கடேஸ்வரன்
இந்து தமிழ் திசை பதிப்பகம்
விலை : 150/-
ஆன்லைனில் பெற : https://store.hindutamil.in/publications
தொடர்புக்கு : 7401296562

விஷ்ணுபுரம் சரவணனுக்கு பாராட்டு விழா | திண்ணை: 2025ஆம் ஆண்டுக்கான பால சாகித்ய விருது 'ஒற்றைச் சிறகு ஓவியா' நூலுக்காக விஷ்ணுபுரம் சரவணனுக்கு அறிவிக்கப்பட்டது. இதை ஒட்டி தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கமும் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகமும் இணைந்து 13/7/25 (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு பாராட்டு விழாவை ஒருங்கிணைத்துள்ளன.

இதில் நடிகை ரோகிணி, அகில இந்திய குடிமைப் பணி பயிற்சி மையத்தின் முதல்வர் சங்கர சரவணன், பாடநூல் கழக ஆலோசகர் மூ.அப்பணசாமி, அண்ணா நூலகத்தின் தலைமை நூலகர் காமாட்சி, எழுத்தாளர்கள்-பத்திரிகையாளர்கள் வெய்யில், ஆதி வள்ளியப்பன், எழுத்தாளர்கள் உதயசங்கர், சாலை செல்வம், விழியன், லக்ஷ்மி பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பேசுகின்றனர்.

SCROLL FOR NEXT