இலக்கியம்

நூல் வரிசை - ‘கவித் தூரிகை’ முதல் ‘கல்வியாய் வந்த கடவுள்’ வரை

செய்திப்பிரிவு

கவித் தூரிகை
ப.விசாகப்பெருமாள்
செல்லம் பதிப்பகம்
விலை: ரூ.150
தொடர்புக்கு: 9444028356

ஓசை நயம் மிக்கக் கவிதைகளின் தொகுப்பு இது. பல பொருள்களின் கவிதைகளைப் படைத்திருக்கிறார் கவிஞர்.

அடிமைப்பெண்ணின் உரிமைக்குரல்
தமிழ்க்கதிர் சம்சுல்
ஹுதா பானு
சந்திரோதயம் பதிப்பகம்
விலை: ரூ.200
தொடர்புக்கு: 7010997639

பெண்களின் பாடுகளைச் சம்பவங்களாகத் தொகுக்கின்றன இந்தக் கதைகள். வாசிப்பதற்கு எளிமையான ஒரு மொழியுடனும் இந்தக் கதைகள் எழுதப்பட்டுள்ளன.

அறுபதிலும்
ஆனந்த வாழ்வு!
லட்சுமி சுப்ரமணியம்
நர்மதா பதிப்பகம்
விலை: ரூ.150
தொடர்புக்கு: 9840226661

முதியவர்களுக்கான வாழ்க்கை முறைகளை இந்த நூல் முன்மொழிகிறது. முதியவர்களின் ஒவ்வொரு பிரச்சினைக்குமான தீர்வை இந்த நூல் சொல்கிறது.

தோழர் லெனின்
எழில்முத்து
சத்யா எண்டர்பிரைசஸ்
விலை: ரூ.180
தொடர்புக்கு: 9080529054

புரட்சியாளர் லெனின் கதையை எளியவர்களும் புரியும் வண்ணம் விறுவிறுப்பாக இந்த நூலில் எழுதப்பட்டுள்ளது.

கல்வியாய் வந்த கடவுள்
யா.சாம்ராஜ்
கவிதா பப்ளிகேஷன்
விலை: ரூ.175
தொடர்புக்கு: 7402222787

அழகப்பா பல்கலைக்கழக நிறுவனரான அழகப்பரின் கல்வித் தொண்டை வியந்து பாடும் கவிதைத் தொகுப்பு இது.

SCROLL FOR NEXT