கருவானிலொரு சிறு கீறல்
ஆழ்வார்குறிச்சி ப.சொக்கலிங்கம்
அகநி வெளியீடு
விலை: ரூ.120
தொடர்புக்கு: 9444360421
ஜப்பானியக் கவிதை வடிவமான ஹைக்கூ பாணியில் எழுதப்பட்டுள்ள இந்தக் கவிதைகள் அன்றாடத்தைப் பாடுபொருளாகக் கொண்டுள்ளன.
யானைப்பூ
ஜோ
முதற்கல் சொற்கூடம்
விலை: ரூ.125
தொடர்புக்கு: 9344307964
யானைகளைப் பாடுபொருளாகக் கொண்ட பல கவிதைகள் காட்டின் வாசனையுடன் இந்தத் தொகுப்பில் உள்ளன.
ஆண்களைப் படுத்தும்
பிராஸ்டேட்
பிரச்னைகள்
கே.வி.எஸ்.சுந்தரம்
கற்பகம் புத்தகாலயம்
விலை: ரூ.250
தொடர்புக்கு: 044 24314347
ஆண்களின் சிறுநீர்க் குழாயைச் சுற்றியுள்ள ஒரு சுரப்பி பிராஸ்டேட் (Prostate). அது சார்ந்த பிரச்சினைகளுக்கான சிகிச்சை முறையைச் சொல்லும் நூல் இது.
கறுப்பின் புரட்சி
ஜெகாதா
நவீன மித்ரா பப்ளிகேஷன்ஸ்
விலை: ரூ.150
தொடர்புக்கு: 8015827644
நிறவெறிக் கொடுமையை வரலாற்றுப் பின்னணியுடன் சொல்லும் நூல் இது. அதற்கு எதிரான போராட்ட வரலாற்றையும் சொல்கிறது.
மதிரநாட்டு
இளவரசன்
கே.கனகபுஷ்பம்
ஸ்ரீசெண்பகா பதிப்பகம்
விலை: ரூ.180
தொடர்புக்கு: 044 24331510
கடல்கொண்ட குமரிக் கண்டத்தை ஆண்டதாகச் சொல்லப்படும் திருவிற் பாண்டிய வழுதியின் கதையைச் சொல்லும் நாவல் இது.