இலக்கியம்

நூல் வரிசை

செய்திப்பிரிவு

தென்னைமரம் பேசுகிறேன்
ஞா.சிவகாமி
மணிமேகலைப் பிரசுரம்
விலை: ரூ.120
தொடர்புக்கு: 044 24342926

முற்போக்குக் கருத்துகளை வலியுறுத்தும் கதைகள் இவை, புழக்கத் தமிழில் எழுதப்பட்டுள்ளன.

பண்டிதமணி
சோமலெ
முல்லை பதிப்பகம்
விலை: ரூ.50
தொடர்புக்கு: 9840358301

பண்டிதமணி கதிரேசன் செட்டியாரின் வாழ்க்கை வரலாற்று நூலின் சுருக்கம். அறிஞர் சோமலெ எழுதியிருப்பது இதன் சிறப்பு அம்சம்.

சிட்டுக்குருவியின் சிறு கூட்டுக்குள்
கீழ்வேளூர் ப.ஜெயக்குமார்
ஜெயஜோதி பதிப்பகம்
விலை: ரூ.60
தொடர்புக்கு: 9789061333

காதல், எண்ணங்கள், நட்பு, நம்பிக்கை எனப் பல பொருள்களைத் தெளிவாக விளக்கிக் கூறுபவற்றின் தொகுப்பு இது.

அரவிந்தர் அரசியலும் அந்தமான் சிறைக் கைதிகளும்
உபேந்திரநாத் பந்த்யோபாத்தியாய்
அலைகள் வெளியீட்டகம்
விலை: ரூ.150
தொடர்புக்கு: 9841775112

அரவிந்தருக்கு ஒரு புரட்சி முகம் இருக்கிறது. அந்த அம்சத்தை இந்த நூல் விரிவாகப் பதிவுசெய்கிறது.

திருநெல்வேலிப்பேட்டை
செ.திவான்
ரெகான் - ரய்யா பதிப்பகம்
விலை: ரூ.250
தொடர்புக்கு: 90803 30200

ஆய்வாளர் செ.திவான், திருநெல்வேலிப் பேட்டைப் பகுதியைப் பற்றி ஆய்வறிந்து சொல்லும் நூல் இது.

காகிதப் புரட்சி
த.ஸ்டாலின் குணசேகரன்
நியூசெஞ்சுரி புக்
ஹவுஸ் பி. லிட்.
விலை: ரூ.600
தொடர்புக்கு: 044 26251968

ஈரோடு புத்தகக் காட்சியை ஆண்டுதோறும் ஒருங்கிணைத்து வருபவர் ஸ்டாலின் குணசேகரன். வாசிப்புக்காகச் செயலாற்றிவருகிறார். அவரது உரைகளின் தொகுப்பு இந்த நூல்.

SCROLL FOR NEXT