மாயா டீச்சரின்
மந்திரக் கம்பளம்
மா
ஹெர் ஸ்டோரீஸ் பதிப்பகம்
விலை: ரூ.225
தொடர்புக்கு: 96003 98660
சிறார்களுக்கான சுவாரசியமான கதைகளின் தொகுப்பு. அந்தப் பிராயத்துக்கே உரிய கற்பனை வளத்துடன் உள்ளன இந்தக் கதைகள்.
கற்றதும் பெற்றதும்
புலவர் வே.பதுமனார்
90ஆவது பிறந்த நாள் குழு
விலை: ரூ.200
தொடர்புக்கு: 94434 90703
புலவர் வே.பதுமனாரின் மாணவர்கள் அவரிடம் பாடம் கேட்டுப் பெற்றதைப் பற்றி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது.
சரித்திரம் சொல்லும் சிலைகள்
லதானந்த்
சத்யா எண்டர்பிரைசஸ்
விலை: ரூ.130
தொடர்புக்கு: 044 45074203
உலகம் முழுவதிலும் உள்ள புகழ்பெற்ற சிலைகளுக்குப் பின்னால் உள்ள வரலாற்றைச் சொல்லும் நூல் இது.
ஃகாலிப் கவிதைகள்
சை.ரஃபீக் பாஷா
காலிஃப் இன்ஸ்டிடியூட்
விலை: ரூ.500
புகழ்பெற்ற உருதுக் கவிஞர் மிர்சா காலிஃபின் கவிதைகளின் மொழிபெயர்ப்பு இது. காதலும் ஆன்மிகமும் இணைந்த கவிப் பொருள்கள் இவை.
சிறுவருக்கான ஷேக்ஸ்பியர் கதைகள்
அருணா வெளியீடு
விலை: ரூ.150
தொடர்புக்கு: 94440 47790
ஷேக்ஸ்பியர் எழுதிய கதைகளில் சிறார்களுக்கு உரியதைத் தேர்ந்தெடுத்து இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.