இலக்கியம்

கலைகளை மக்கள் வசப்படுத்தியவர்

செய்திப்பிரிவு

தமிழர் வாழ்வில் ஒன்றுகலந்த பண்பாட்டுக் கூறுகளுள் ஒன்று, பிரிக்க முடியாத ஒன்று இசை. ஆனால், குறிப்பிட்ட வகையில் மட்டுமே பாடப்படக்கூடிய, சற்றே கடினமான இலக்கணத்தைக் கொண்ட இசைதான் உயர்ந்தது என்கிற கண்ணோட்டத்துடன் சாதாரண மக்களிடம் இருந்து இசை தள்ளி நிறுத்தப்பட்டிருந்தது.

கலைகளுக்கு அப்படி எந்தக் கட்டுப்பாடும் தேவையில்லை, ரசிப்பதுபோலவே அனைவரும் பாடலாம் என்கிற நம்பிக்கையை யும் அதற்கான குழுக்களையும் பரவலாக்கிச் சேர்ந்திசை வடிவத்தைப் பிரபலமாக்கியவர் இசை மேதை எம்.பி.சீனிவாசன். தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளரான அவரைத் தமிழ்த் திரையுலகம் கொண்டாடாவிட்டாலும், மலையாளத் திரையுலகம் வாரி அணைத்துக்கொண்டது.

தென்னிந்தியாவின் மிகப் பெரிய தொழில்களில் ஒன்றான திரைத் துறையில் தொழிலாளர்களின் உரிமைகள், நலன்களை நிமாய் கோஷ் போன்றோருடன் இணைந்து தொடர்ந்து வலியுறுத்தியவர் எம்.பி.எஸ். தென்னிந்தியாவின் முதல் திரையுலகத் தொழிற்சங்கத்தை நிறுவியவர்.

1988இலேயே எம்.பி.எஸ். மறைந்துவிட்டபோதும் 35 ஆண்டுகள் கழித்து இப்போதுதான் அவரைப் பற்றிய தமிழ் நூல் வெளியாகிறது. மொழிபெயர்ப்புக்காக நன்கு அறியப்பட்ட மு.இக்பால் அகமது அவரைப் பற்றி விரிவாகத் தேடி எழுதியுள்ளார்.

பல அரிய படங்களும் இடம்பெற்றுள்ளன. திரைப்படம், இசை போன்ற கலைகளுக்கு நமது பெருமைமிகு பங்களிப்பு குறித்து அறியவும், இந்தத் துறைகள் ஜனநாயகப்படுத்தப்பட வேண்டுமென விரும்புபவர்களும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல். - ஆதி

மக்களிசை மேதை எம்.பி.சீனிவாசன்
மு.இக்பால் அகமது
பரிசல் வெளியீடு
விலை ரூ. 350
தொடர்புக்கு: 93828 53646

காவிரித் தென்படுகை மனிதர்கள்: தென்னை மரம் ஏறுவது தங்கராசின் முதன்மையான தொழில். பண்ணையார் தோப்பில் அவனுக்கு எப்போதும் வேலை இருக்கும். அவன் மனைவி அஞ்சலை விவசாயக் கூலி வேலைக்குச் செல்கிறாள். ஒரே பிள்ளையான முருகனைப் பள்ளியில் சேர்க்கும் அஞ்சலையின் முடிவில் தங்கராசுவுக்கு உடன்பாடு இல்லை. இதுகுறித்த இருவருக்குமான பேச்சு, சண்டை ஆகிறது.

தங்கராசு தன் மனைவியை முதல் முறையாக அடிக்கிறான். மகனையும் பண்ணையில் வேலைக்குச் சேர்க்க தங்கராசு கூட்டிச் செல்கிறான். பள்ளிக்கே போகாத தங்கராசுவுக்கு அங்கே கிடைக்கும் பாடம் ‘தளவாடி’ என்கிற சிறுகதையில் உணர்வுபூர்மாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது.

‘கோட்டவம்’ சிறுகதைத்தொகுப்பில் தங்கராசு போலக் காவிரித் தென்படுகை மனிதர்கள் சிலர் வலம் வருகின்றனர். அந்த வட்டாரத்தில் உள்ள தில்லைவிளாகம் என்னும் ஊரைச் சேர்ந்த அலையாத்தி செந்தில் இக்கதைகளை எழுதியுள்ளார். குடியிருப்புகளுக்குத் தொலைவில் அமைந்துள்ள வயல்வரப்பு ‘கோட்டவம்’ எனக் குறிப்பிடப்படுகிறது. தலைப்புச் சிறுகதையின் நாயகனான கோயிந்தக் கோனார் மாடுகளைக் கிடை போடும் தொழில் செய்பவர்.

நிலா வெளிச்சம்கூட கன்றுக்குட்டியின் வாயில் ஒட்டியிருக்கும் பாலாகத்தான் அவருக்குத் தோன்றும். தன்னுடைய இறுதி மணித்துளிகளிலும் மாடுகள் மீது அவர் வெளிப்படுத்தும் நேசம் வாசகர்கள் எதிர்பார்த்திராத ஒரு பின்னணியில் கூறப்பட்டுள்ளது. கணவனின் தொழிலுக்காகத் தாலியை அடகு வைக்கும் வேதாம்பாள், கால மாற்றத்தைக் கணவனை விட நன்றாகப் புரிந்து வைத்திருக்கிற அஞ்சலை போன்ற கதையில் வரும் பெண்களின் எதிர்வினைகள் வலிமையானவை.

கிராமத்து முதியவர் ஒருவர் தொழிலிலிருந்தோ, இந்தப் பூமியிலிருந்தோ விடைபெறும்போது ஒட்டுமொத்தச் சூழல் குறித்தும் அவர் திரட்டி வைத்திருந்த அறிவும் மறைய போவதை இக்கதைகள் கூறுகின்றன. ஐந்து நெடுங்கதைகளிலும் இடம்பெறும் வட்டார வழக்குச் சொற்களுக்கான பொருள்கள் நூலின் இறுதியில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. - ஆனந்தன் செல்லையா

கோட்டவம்
அலையாத்தி செந்தில்
யாப்பு வெளியீடு
விலை: ரூ. 200
தொடர்புக்கு: 9677118937

சமூகக் கருத்து பொதிந்த கட்டுரைகள்: குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள், குடும்​பம்​, உணவு, சமூகம்​, ​காலநிலை ​மாற்​றம்​ ஆகிய ஏழு தலைப்​பு​களில்​ 32 சமூகம்​ ​சா​ர்​ந்​த கட்​டுரைகள்​ இந்​த நூலில்​ இடம்​பெற்​றுள்​ளன. இந்​தக்​ கட்​டுரைகள்​ அனைத்​து​ம்​ இந்​த மண்​ணை​யும்​ இந்​த மக்​களை​யும் ​நாம்​ மேலும்​ மேலும்​ நேசிக்​கத்​ தூண்​டு​வ​தாக அமைந்​துள்​ளன. பெண்​ குழந்​தைகள்​ ​பாது​காப்​பு பற்​றி ​விரி​வாக அலசுகிறது இந்​த நூல்​.

தொலைந்​து ​போன கூட்​டுக்​ குடும்​பம்​ ​முறை, கணவன்​ - மனை​வி இடையே ஏற்​பட்​டுள்​ள இடைவெளி, தொழில்​நுட்பச் சாதனங்களால் ஏற்படும் தீங்கு ஆகியவற்றையும் பட்டியலிட்டதோடு பெற்றோர் குழந்தை உறவு வலுப்பட என்ன செய்ய வேண்டும் என்பதையும் அழகாக இந்நூலில் பதிவுசெய்துள்ளார்.

அது போன்று மனநலத்தைப் பாதுகாக்காவிட்டால் ஏற்படும் அபாயங்களைத் தெளிவாகப் பதிவுசெய்துள்ளார். ஆரோக்கியமான உணவு உண்ண வேண்டும் என்று கூறுகின்ற அதே வேளையில் அத்தகைய உணவு கிடைப்பதில் உள்ள சிக்கல்களையும் சொல்லியுள்ளார். 16 வகையான பாரம்பரிய விளையாட்டுகள் பற்றியும் அவற்றை விளையாடுவதன் விளைவாகப் பெறும் பயன்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். இந்நூலில் உள்ள கட்டுரைகள் அனைத்தும் தனித்தன்மை வாய்ந்தவை. ஒவ்வொரு கட்டுரையும் மிகவும் ஆழமாக பல்வேறு அரிய தகவல்களைக் கொண்ட தகவல் பெட்டகமாக இருக்கிறது. - எம்.ஜே.பிரபாகர்

எல்லோரும் நலமே..?
ப.திருமலை
மண், மக்கள், மனிதம் வெளியீடு
விலை : ரூ.200
தொடர்புக்கு: 9865628989

SCROLL FOR NEXT