இலக்கியம்

நூல்வரிசை

செய்திப்பிரிவு

கரிசல் சொலவடைகள்,
விடுகதைகள், நாட்டார் கதைகள்
தேர்வும் தொகுப்பும்:
ம.மணிமாறன், பெ.ரவீந்திரன்
விருதுநகர் மாவட்ட
நிர்வாகம் வெளியீடு

கரிசலுக்கு நவீன இலக்கியத்தில் முக்கியமான இடமுண்டு. அதன் ஆணி வேர் எனச் சொலவடைகளையும் நாட்டார் கதைகளையும் சொல்லலாம். அவற்றின் தொகுப்பு இது.

பொய்த்திரை
கா.சு.வேலாயுதன்
கதை வட்டம் வெளியீடு
விலை: ரூ. 180
தொடர்புக்கு: 9994498033

நவீன வாழ்க்கையின் பிரச்சினைகளை அதற்கேற்ற நவீன மொழியில் சொல்லும் கதைகள் இவை. எளிய மொழியில் அமைந்த இந்தக் கதைகள், நம் வாழ்க்கையின் மீது தீவிரமான கேள்விகளை எழுப்புகின்றன.

எழுச்சித் தமிழர் விருதுகள் | திண்ணை

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வழங்கும் எழுச்சித் தமிழர் இலக்கிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கவிதை விருதுக்கு யவனிகா ஸ்ரீராமும் சிறுகதை விருதுக்கு ஜெயராணியும் நாவல் விருதுக்கு ஸ்ரீதரகணேசனும் கட்டுரை நூல் விருதுக்கு பேரா.அ.ராமசாமியும் பெண் எழுத்து விருதுக்கு புதியமாதவியும் பெளத்த விருதுக்கு பா.ஜம்புலிங்கமும் சிறார் எழுத்து விருதுக்கு நீதிமணியும் திரை விருதுக்கு இயக்குநர் ச.ஜெயக்குமாரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். சிறந்த படமாக ‘பராரி’ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த விருதுகள் தலா ரூ.10,000 ரொக்கமும் பாராட்டுக் கேடயமும் உள்ளடக்கியவை.

தமிழ்மகன் கூட்டம்

எழுத்தாளார் தமிழ்மகனுக்கு ஒரு நாள் கூட்டம் இன்று (15.03.25) காலை 10 மணியில் தொடங்கி சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறுகிறது. கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன், சிந்துவெளி ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன், ஆய்வாளர் கடற்கரய், கவிஞர் பச்சியப்பன், எழுத்தாளர்கள் பாரதிபாலன், உமாசக்தி, திலகபாமா உள்ளிட்ட பலர் உரை நிகழ்த்துகிறார்கள்.

16 நூல்கள் வெளியீடு

கவிஞர் க்ருஷாங்கினி தலைமையில் 16 நூல்கள் வெளியிடப்படுகின்றன. இன்று (15.03.25) மாலை 5 மணி அளவில் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறும் இந்த நிகழ்வில் க்ருஷாங்கினி, பிருந்தா சேது, கீதா இளங்கோவன் உள்ளிட்ட 15 பேரின் ஆக்கங்கள் ஹெர் ஸ்டோரீஸ் பதிப்பகத்தின் சார்பாக வெளியிடப்படவுள்ளன.

SCROLL FOR NEXT