இலக்கியம்

நூல் வரிசை

செய்திப்பிரிவு

கற்பனை அலைகள்
எஸ்.ராமகிருஷ்ணன்
தேசாந்திரி பதிப்பகம்
விலை: ரூ.180
தொடர்புக்கு: 044 23644947

உலக இலக்கியங்களைப் பற்றியும் உலக இலக்கிய ஆளுமைகளைப் பற்றியும் தனது ஆழமான புரிதலை இந்தக் கட்டுரைத் தொகுப்பின் வழி எஸ்.ராமகிருஷ்ணன் முன்வைக்கிறார்.

சொல்லாச் சொல்லும்
பொருள் குறித்தனவே
செ.மன்னர் மன்னன்
அறம் பதிப்பகம்
விலை: ரூ.130
தொடர்புக்கு: 9150724997

தனது அனுபவங்களை, வாழ்க்கை குறித்த தனது புரிதலை சில வரிகளுக்குள் கவிதையாக்க முயன்றுள்ளார் கவிஞர். இவை எல்லாமும் அமைதி, பேச்சு ஆகிய பொருளில் அமைந்துள்ளன.

அந்திச்சுழியம்
எஸ்.சண்முகம்
போதிவனம்
விலை: ரூ.200
தொடர்புக்கு: 98414 50437

கவிதைகள் குறித்து அதிகம் பேசியும் எழுதியும் வரும் எஸ்.சண்முகத்தின் கவிதைகள் இவை. தமிழின் சந்த மரபின் தொடர்ச்சியைப் போல இந்தக் கவிதைகள் வெளிப்பட்டுள்ளன.

பத் மஸ்ரீ கலைஞர்களுக்குப் பாராட்டு | திண்ணை: பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்ட கூத்துக் கலைஞர் கண்ணப்ப சம்பந்தன், பறையிசைக் கலைஞர் வேல் முருகன் ஆகிய இருவருக்கும் நாளை (23.02.25) பிற்பகல் 3 மணிக்கு சென்னைப் பல்கலைக்கழகப் பவளவிழாக் கலையரங்கில் பாராட்டு விழா நடைபெறவுள்ளது. பிரளயன், அம்ஷன் குமார், வெளி ரங்கராஜன், பேரா.வீ.அரசு, பேரா. கோ.பழனி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பல ஆ ளுமைகள் கலந்துகொண்டு வாழ்த்துகிறார்கள்.

திரு மூலர் இரா.முருகனுக்கு பஞ்சுப் பரிசில்: ஆண்டுதோறும் பேராசிரியர் க.பஞ்சாங்கம் பெயரில் வழங்கப்படும் பஞ்சுப் பரிசில் விருதுக்கு திருமூலர் இரா.முருகன் தே ர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் எழுதிய ‘திருமூலரியம்’ நூலுக்காக இந்த விருது இவருக்கு வழங்கப்படவுள்ளது. இந்த விருது ரூ.10,000 பரிசுத் தொகையும் பாராட்டுப் பத்திரமும் உள்ளடக்கியது.

SCROLL FOR NEXT