இலக்கியம்

நூல் வரிசை: அண்ணன்மார் சுவாமி கதை

செய்திப்பிரிவு

அண்ணன்மார் சுவாமி கதை
சக்திக்கனல்
நர்மதா பதிப்பகம்
விலை: ரூ.400
தொடர்புக்கு: 98402 266661

பிரபலமான நாட்டார் கதையான பொன்னர் சங்கர் வரலாற்றின் முழுமையான தொகுப்பாக இந்த நூல் வெளிவந்துள்ளது. நாட்டார் பாடல்களுடன் இந்தக் கதை சொல்லப்பட்டுள்ளது.

உயர் சாதி இந்துப் பெண்
பண்டித ரமாபாய் (தமிழில்: ஜா.கிறிஸ்டி பெமிலா)
ஹெர் ஸ்டோரீஸ்
விலை: ரூ.160
தொடர்புக்கு: 96003 98660

உயர் சாதி எனச் சொல்லப்படும் சமூகத்தில் பிறந்த பெண்களுக்குக் கணவனை இழந்த பிறகு வாழ்க்கை இல்லை என்கிற சமூகச் சூழல் குறித்து ரமா பாய் ஆங்கிலத்தில் எழுதிய நூலின் தமிழாக்கம் இது.

இந்திய அறிவியல் அறிஞர்கள்
உத்ரா துரைராஜன்
சுவாசம் பதிப்பகம்
விலை: ரூ.240
தொடர்புக்கு: 81480 66645

சர் ஜெகதீச சந்திர போஸ், ஸ்ரீனிவாச ராமானுஜம் உள்ளிட்ட அறிஞர்களுடன் இந்தியப் புவியியல் ஆராய்ச்சிக்கு வித்திட்ட தாராஷா நோஷெர்வான் வாடியா உள்ளிட்ட அதிகம் அறியப்படாத அறிஞர்கள் பற்றி இந்த நூலில் சொல்லப்பட்டுள்ளது.

பொருள்முதல்வாதம் என்றால் என்ன?
இரா.பாரதிநாதன்
சந்தியா பதிப்பகம்
விலை: ரூ.125
தொடர்புக்கு: 044 24896979

பொருள்முதல்வாதத் தத்துவத்தை முழுமையாக விளக்குகிறது. அதன் தோற்றத்தையும் வளர்ச்சியையும் நம் சமூகப் பின்னணியில் நின்றுபார்க்கிறது இந்த நூல்.

மாயூரம் நீதிபதி வேதநாயகரின் பெண்ணியக் கோட்பாடுகள்
ஆ.தாமஸ்
வியானி வெளியீடு
விலை: ரூ.250
தொடர்புக்கு: 94430 53243

தமிழின் முதல் நாவலான ‘பிரதாப முதலியார் சரித்திர’த்தை எழுதிய மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் பெண்ணியக் கோட்பாடுகள் குறித்து இந்த நூல் பேசுகிறது.

SCROLL FOR NEXT