திருக்குறள் (மூலமும் விளக்க உரையும்)
புலவர் நன்னன்
ஏகம் பதிப்பகம்
விலை: ரூ.550
தொடர்புக்கு: 97908 19294
குறள் பல பதிப்புகளில் பலவாறு பயன்படுத்தப்பட்டுள்ளது. பேரா. நன்னன் மூலபாடத்தில் மாற்றம் இல்லாமல், தமிழ்ப் புணர்ச்சி முறையில் பழுது நேராமல் இந்த நூலில் தொகுத்துள்ளார்.
குடியரசுத் தலைவர் ஆளுநர் அதிகாரங்கள்
சிகரம் ச.செந்தில்நாதன்
சந்தியா பதிப்பகம்
விலை: 270
தொடர்புக்கு: 044 24896979
நம்முடைய ஜனநாயக அமைப்பில் குடியரசுத் தலைவர், ஆளுநர் ஆகியோருக்கு உள்ள அதிகாரங்கள் என்னென்ன என்பவற்றைக் குறித்து, வழக்கறிஞரும் செயல்பாட்டாளருமான செந்தில்நாதன் தெளிவுபட எழுதியுள்ளார்.
இயக்குநர் மணிவண்ணனும் நானும்
கே.ஜீவபாரதி
நம் பதிப்பகம்
விலை: ரூ.450
தொடர்புக்கு: 9566110745
தமிழில் நடிகராகவும் கதையாசி ரியராகவும் இயக்குநராகவும் தனித் தடம் பதித்தவர் மணிவண்ணன். அவருடனான நட்பு குறித்து எழுத்தாளர் கே.ஜீவபாரதி இந்நூலில் சுவைபட எழுதியுள்ளார்.
தீங்கூக்கல் (சிறுகதைகள்)
ஹரணி
புஸ்தகா பதிப்பகம்
விலை: ரூ.190
தொடர்புக்கு: 7418555884
அன்புடன் இருக்கும் மனித உறவுகளுக்குள் இயல்பாக எழும் சிக்கல்களே இந்தக் கதைகளின் ஆதாரம். அந்தச் சிக்கல்களை எப்படி மனிதர்கள் எதிர்கொள்கிறார்கள் என யதார்த்தமாகச் சொல்லியுள்ளார் எழுத்தாளர்.
நாட்டுப்புற இராமாயணங்கள்
பேரா.சு.சண்முகசுந்தரம்
காவ்யா பதிப்பகம்
விலை: ரூ.500
தொடர்புக்கு: 044 23726882
இந்திய அளவில் பண்பாட்டில் தாக்கத்தை விளைவித்த ராமாயணம், தமிழ் நாட்டார் பண்பாட்டில் விளைவித்த தாக்கங்களை இந்நூல் விரிவாகப் பேசுகிறது.