பல்வகை மரங்களால் பசுமை வளாகமாக திகழும் மதுரை மாநகராட்சி அலுவலகம் - படையெடுக்கும் பறவைகள்

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: மரங்கள் நிரம்பிய பசுமை வளாகத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு அதில் வெற்றியும் கண்டு இருக்கிறது மதுரை மாநகராட்சி.

கடந்த 1990ம் ஆண்டு முதல் பல்வேறு காலக்கட்டங்களில் பசுமையான பல்வகை மரக்கன்றுகளை நட்டு செழித்து வளர்ந்து நிற்கும் அந்த மரங்களை பராமரிப்பதோடு, சுற்றுச்சூழல் அவசியத்தின் மகத்துவத்தை விழிப்புணர்வு செய்வதில் மற்ற மற்ற அலுவலகங்களுக்கு முன் உதாரணமாக திகழ்கிறது.

வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள மதுரை மாநகராட்சி, தமிழகத்தின் பழமையான நகரங்களில் ஒன்றாக திகழ்கிறது. மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் திருமலை நாயக்கர் அரண்மனை ஆகியவற்றுடன் இந்த நகரம் பல வரலாற்று நினைவுச் சின்னங்களைக் கொண்டுள்ளது. ஆட்டோ மொபைல், ரப்பர், ரசாயனம், கைத்தறி, ஜவுளி மற்றும் கிரானைட் உற்பத்தித் தொழில்கள் அதிகம் நடந்தாலும் ஆன்மீக சுற்றுலா நகராகவும் உள்ளது. தகவல் தொழில்நுட்பத்திற்கான (IT) இரண்டாம் நிலை நகரமாகவும் உருவாகி வருகிறது.

அதுபோல், நெருக்கமான வாகனப் போக்குவரத்து, மோசமான சாலை கட்டமைப்பு வசதியால் அதிகமான புழுதியும் தூசியும் அதிகம் படரும் நகரமாகவும் மதுரை உள்ளது. அதனால், மாசு கட்டுப்பாட்டு வாரியம் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், ஆரோக்கியமான காற்று கிடைக்கவும் மரங்களை வளர்க்க கடந்த 30 ஆண்டிற்கு முன்பே எச்சரித்தது. அதன் அடிப்படையில் நகரின் மையத்தில் அதிக இரைச்சலும், வாகனப்போக்குவரத்தும் மிகுந்த தல்லாக்குளம் சாலையில் உள்ள மதுரை மாநகராட்சி வளாகத்தில், மரக்கன்றுகளை நடும் முயற்சியை மாநகராட்சி தொடங்கியது.

கால்நூற்றாண்டிற்கு பிறகு தற்போது அதற்கு கை மேல் பலன் கிடைக்க, அடர்ந்த பசுமை சோலைவனத்திற்குள் மாநகராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. நாவல், இலுப்பை, நீர் மருது, இயல் வாகை, சந்தன வேம்பு, தாண்ரிக்காய், பூவரசம், வேம்பு, மகிழம், பாதாம் மரங்கள் என ஒரே வளாகத்தில் பல ஆயிரம் மரங்கள் உள்ளன. இந்த மரங்களின் மேலே பறவைகள், அணில்கள் வாழ்கின்றன. பறவைகள் படையெடுப்பும், மரங்களின் அடர்த்தியான நிழலும் நாம் ஒரு அடர் காட்டில் இருப்பதை போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. இப்படி ஆரோக்கியமான சூழலும், சுத்தமான காற்றும் கிடைப்பதாலே போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களும், படிக்க மாநகராட்சி வளாகத்திற்கு பறவைகளை போல் படையெடுக்கின்றனர்.

மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘தமிழகத்திலே ஒரே வளாகத்தில் இவ்வளவு மரங்களை வேறு எந்த அரசு அலுவலகத்திலும் பாத்திருக்க முடியாது. அந்தளவுக்கு அடர்த்தியாக மரங்கள் காணப்படுகிறது. இந்த மரங்கள் அனைத்து ஒரே நேரத்தில் உருவாக்கப்படவில்லை. 1996ம் ஆண்டு மதுரை மேயராக குழந்தைவேலு இருந்தபோது மாநகராட்சி வளாகத்திலே சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. அதன்பிறகு செ.ராமச்சந்திரனில் தொடங்கி ராஜன்செல்லப்பா, தற்போது மேயராக உள்ள இந்திராணி வரை எந்த ஒரு நிகழ்ச்சி நடந்தாலும் அலுவலக வளாகத்தில் மரக்கன்று நடப்படுகிறது. அதனாலே, மாநகராட்சி வளாகம் பசுமையாக உள்ளது’’ என்றனர்.

சுற்றுச்சூழல் ஆர்வலர் பொன்குமார் கூறுகையில், ‘‘மியா வாக்கி அடர்வனம் தற்போதுதான் பிரபலமாகியுள்ளது. ஆனால், 30 ஆண்டிற்கு முன்பிருந்தே மதுரை மாநகராட்சி வளாகத்தில், அதனையொட்டி உள்ள பூங்காவிலும் அடர் வனத்தை திட்டமிட்டு மரங்கள் அடத்தியாக நட்டு வளர்க்கப்பட்டு வந்துள்ளது. வளாகத்தில் நடைபாதைகளை தவிர்த்து, மரங்கள்தான் உள்ளது. பசுமை வளாகம் என்பது அரசு அலுவலகங்களில் பெயரளவுக்கே பராமரிக்கப்படுகிறது. ஆனால், மதுரை மாநகராட்சி வளாகத்தில் நிஜமாக கண் முன்பே பசுமை வளாகத்தைப் பார்க்கலாம்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

ஓடிடி களம்

5 mins ago

விளையாட்டு

20 mins ago

சினிமா

22 mins ago

உலகம்

36 mins ago

விளையாட்டு

43 mins ago

ஜோதிடம்

25 mins ago

ஜோதிடம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்