இந்தியா

வங்கதேசத்திடம் 20 ரயில் இன்ஜின்கள் ஒப்படைப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: கடந்த 2019-ம் ஆண்டு அக்டோ பரில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு வருகை தந்தார். அப்போது, அவரிடம் 20 அகலப்பாதை (பிஜி) ரயில் இன்ஜின்களை தயாரித்து அளிப்பதாக இந்தியா சார்பில் உறுதியளிக்கப்பட்டது.

அந்த உறுதிமொழியை நிறைவேற்றும் விதமாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 20 இன்ஜின்கள் வங்கதேசத்திடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டன. இந்த இன்ஜின்களை பயணிகள் மற்றும் சரக்கு ஆகிய இரண்டு ரயில் போக்குவரத்துக்கும் பயன்படுத்தலாம்.

இந்தியாவில் உருவாக்கப்பட்ட இன்ஜிகளை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வங்கதேச அதிகாரிகளிடம் முறைப்படி ஒப்படைத்தார்.

SCROLL FOR NEXT