குண்டுவெடிப்பு வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற அனைவரும் விடுவிப்பு

By செய்திப்பிரிவு

ஜெய்ப்பூர்: 2008-ம் ஆண்டு மே மாதம் 13-ம் தேதி ஜெய்ப்பூர் நகரில் 12 நிமிட இடைவெளியில் தொடர்ந்து 8 இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன. இதில் 71 பேர் உயிரிழந்தனர்.

இதையடுத்து இந்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டு ஜெய்ப்பூர் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இதில் முகமது சைப் உள்ளிட்ட 4 பேருக்கு தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்டது. சான்பாஷ் என்பவருக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இல்லாதததால் அவர் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், இந்த தண்டனையை எதிர்தது 4 பேரும் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் பங்கஜ் பண்டாரி, சமீர் ஜெயின் ஆகியோர் அடங்கிய அமர்வு, தண்டனை விதிக்கப்பட்ட 4 பேரையும் விடுதலை செய்து நேற்று உத்தரவிட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

சுற்றுலா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்