2070-ம் ஆண்டுக்குள் கரியமில வாயு இல்லாத இந்தியா - ரூ.35 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

By செய்திப்பிரிவு

வரும் 2023-24 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:

பாரிஸ் பருவநிலை மாறுபாடு ஒப்பந்தத்தின்படி, வரும் 2070-ம்ஆண்டுக்குள் கரியமில வாயு வெளியேற்றத்தை 100% தடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது புதைபடிவ எரிபொருளில் இருந்து புதுப்பிக்கத்தக்க எரிபொருளுக்கு மாற திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக பட்ஜெட்டில் ‘பசுமை வளர்ச்சி’ என்ற தலைப்பில் புதிய பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த இலக்கை எட்ட முன்னுரிமை மூலதனமாக ரூ.35 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டத்துக்கு மத்திய அரசு கடந்த 4-ம் தேதி ஒப்புதல் வழங்கியது. இந்த திட்டத்துக்கு ரூ.19,700 கோடி ஒதுக்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் இந்திய தொழிற்சாலைகள் பசுமை தொழிற்சாலைகளாக மாற்றப்படும்.

வரும் 2030-க்குள் 5 எம்எம்டி உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புதைபடிவ எரிபொருள் இறக்குமதி கணிசமாக குறையும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

40 mins ago

சினிமா

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

5 hours ago

வலைஞர் பக்கம்

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

6 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்