முன்னாள் மத்திய அமைச்சர் ஷரத் யாதவ் உடல்நலக்குறைவால் காலமானார்

By செய்திப்பிரிவு

குருகிராம்: சோசலிஸ்ட் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஷரத் யாதவ் உடல்நலக்குறைவால் மரணமடைந்துள்ளார்.

75 வயதான அவர் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் வீட்டில் ஓய்வெடுத்துவந்தார். இன்று மாலை அவரது உடல்நிலை கவலைக்கிடமான நிலைக்குச் செல்ல குருகிராமில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் செல்லப்பட்டார். ஆனாலும், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். ஷரத் யாதவ் இறப்பை அவரின் மகளும் காங்கிரஸ் தலைவருமான சுபாஷினி ஷரத் யாதவ், ட்விட்டரில் "அப்பா இப்போது இல்லை" என்று பதிவு செய்து உறுதிப்படுத்தியுள்ளார்.

ஷரத் யாதவ் மறைவையடுத்து பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், “ஷரத் யாதவ் ஜியின் மறைவு வேதனை அளிக்கிறது. எம்.பி., அமைச்சர் என நீண்ட ஆண்டுகள் பொது வாழ்வில் தனித்து விளங்கினார் அவர். டாக்டர் லோஹியாவின் கொள்கைகளால் அவர் பெரிதும் ஈர்க்கப்பட்டார். அவருடனான தொடர்புகளை நான் எப்போதும் போற்றுவேன். அவரது குடும்பத்தினருக்கு இரங்கல்கள். ஓம் சாந்தி.” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

26 mins ago

விளையாட்டு

49 mins ago

வேலை வாய்ப்பு

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

1 hour ago

கல்வி

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்