அப்துல் பாரி சித்திக்கி 
இந்தியா

"இந்தியா வேண்டாம் வெளிநாட்டிலேயே இருக்கட்டும் .. " - லாலு கட்சிப் பிரமுகர் பேச்சால் சர்ச்சை

செய்திப்பிரிவு

எனது குழந்தைகளை வெளிநாட்டில் செட்டில் ஆக்குவேன் என்று பேசிய லாலு பிரசாத் கட்சிப் பிரமுகர் அப்துல் பாரி சித்திக்கி பேசியது சர்ச்சையாகி உள்ளது.

லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனத தள கட்சியின் பொதுச் செயலாளர் அப்துல் பாரி சித்திக்கி. இவர் அண்மையில் நடந்த கூட்டத்தில், "இந்த நாட்டில் தற்போது நிலவும் சூழலை விவரிக்க ஒரு தனிப்பட்ட அனுபவத்தை நான் பகிர்கிறேன். என் மகன் அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படிக்கிறார். என் மகள் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகானாமிக்ஸில் படிக்கிறார். நான் அவர்களிடம் அங்கேயே படித்துவிட்டு அங்கேயே வேலை தேடி முடிந்தால் வெளிநாட்டு குடியுரிமை பெற்று இருந்துவிடுமாறு சொல்லியிருக்கிறேன். ஆனால் என் பிள்ளைகள் அதை நம்பவில்லை. நான் இப்போது எதிர்கொள்ளும் சவால்களை சமாளிக்க முடியாது. இங்கே சமாளிப்பது கடினம் என்று எடுத்துரைத்தேன் " என்று பேசியிருந்தார்.

இந்தியாவில் முஸ்லிகளுக்கு நெருக்கடி அதிகமாக இருக்கிறது என்பதை நேரடியாக குறிப்பிடாவிட்டாலும் அவரது கருத்துக்கு எதிர்ப்பலைகள் குவிந்துள்ளன. சொந்தக் கட்சியிலுமே கூட எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இது குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் நிகில் ஆன்ந்த், "சித்திக்கியின் கருத்துகள் தேச விரோதமானவை. அவருக்கு இந்தியாவில் இருப்பதற்கு மூச்சுத் திணறினால் அவர் பாகிஸ்தானுக்கு சென்றுவிடலாம். அவரை யாரும் தடுக்கவில்லை" என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT