மைசூரு ஹோட்டலில் பயங்கரம்: கொதிக்கும் சாம்பாரில் விழுந்து 3 வயது பெண் குழந்தை பலி

மைசூருவில் உள்ள ஹோட்டலில் பணியாற்றும் ஊழியரின் 3 வயது பெண் குழந்தை கொதிக்கும் சாம்பாரில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் கும்பார குப்பலு கிராமத்தைச் சேர்ந்தவர் மகா தேவச்சாரி. சமையல் கலைஞரான இவரும் மனைவி அனிதாவும் விஜயநகரில் உள்ள‌ தனியார் ஹோட்டலில் வேலை செய் கின்றனர். இருவரும் வேலைக்கு செல்லும்போது தங்களது 3 வயது மகள் ஹர்ஷாவையும் அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் கடந்த திங்கள் கிழமை ஹர்ஷாவை ஹோட்டலின் சமையல் அறைக்கு கொண்டு சென்றுள்ளனர். குழந்தையை அருகில் உள்ள திண்ணையில் விளையாடவிட்டு இருவரும் சமையல் வேலைகளைக் கவனித் துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக குழந்தை அடுப்பில் கொதித்துக்கொண்டிருந்த சாம்பா ரில் விழுந்துள்ளது.

இதனால் வலியால் துடித்து அலறிய குழந்தையின் சத்தம் கேட்டு ஓடிவந்த மற்ற ஊழியர்கள் ஹர்ஷாவை மீட் டுள்ளனர்.

அருகிலுள்ள மருத்துவ மனைக்கு குழந்தையை கொண்டு சென்று அனுமதித்தனர். உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்ட தால் அங்கு சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. எனவே நேற்று முன் தினம் கே.ஆர்.நகர் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர்.

எனினும் சிகிச்சை பலனின்றி, குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதுதொடர்பாக குழந்தையின் உறவினர்கள் விஜயநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து, தனியார் ஹோட்டல் உரிமை யாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதனிடையே உணவக உரிமையாளர் பிரதீப் இழப்பீடாக ரூ.2 லட்சம் வழங்குவதாக உறுதி அளித்தார். இவ்வழக்கு தொடர்பாக ஹோட்டல் ஊழியர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE