இந்தியா

அமைச்சர் நிர்மலா சீதாராமன் திருப்பதி வருகை

செய்திப்பிரிவு

திருப்பதி: ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா விமான நிலையத்துக்கு வந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை ஆந்திர மாநில நிதி அமைச்சர் பி. ராஜேந்திர பிரசாத், திருப்பதி எம்பி குருமூர்த்தி, இணை மாவட்ட ஆட்சியர் டி.கே. பாலாஜி, திருப்பதி நகர மேயர் டாக்டர். சிரிஷா, ஆணையர் அனுபமா அஞ்சலி மற்றும் பாஜக நிர்வாகிகள் வரவேற்றனர்.

பின்னர், அங்கிருந்து அவர் காரில் காணிப்பாக்கம் விநாயகர் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். அங்கிருந்து மீண்டும் திருப்பதி வந்த அவர், காரில் திருமலைக்கு சென்றார். அங்கு அவரை திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

இரவு திருமலையில் தங்கிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று காலை ஏழுமலையானை தரிசனம் செய்கிறார். அதன் பின்னர், திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும் வருமான வரி கருத்தரங்கில் பங்கேற்கிறார். பின்னர் மீண்டும் திருமலை சென்று இரவு தங்குகிறார்.

SCROLL FOR NEXT