5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் நோட்டா வாக்குகள் அதிகம் பெற்ற மேற்கு வங்கம்

By ஆர்.ஷபிமுன்னா

ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில் மேற்கு வங்கத்தில் நோட்டா வாக்குகள் அதிகம் பதிவாகி உள்ளன.

அசாம், மேற்கு வங்கம், தமிழ் நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய ஐந்து மாநிலங்களின் சட்டப் பேரவை தேர்தல் கடந்த 16-ம் தேதி யுடன் முடிவடைந்தது. இத்தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது.

இதில் நோட்டா வாக்குகள் 17 லட்சத்துக்கும் மேல் பதிவாகி யுள்ளது. இது மேற்கு வங்கத்தில் 8,31,845, தமிழகத்தில் 5,60,533, அசாமில் 1,89,066, கேரளாவில் 1,07,239, புதுச்சேரியில் 13,240 என உள்ளது. இதில் மேற்கு வங்கத் தில் நோட்டா வாக்குகள் அதிக அளவில் பதிவாகியுள்ளது. எனி னும், ஒரு மாநில மக்கள் தொகை யில் எனப் பார்க்கும் போது புதுச்சேரியில் மிக அதிக அளவாக 1.7 சதவீதம் உள்ளது. இது மேற்கு வங்கத்தில் 1.5 சதவீதம், தமிழகத் தில் 1.3 சதவீதம், அசாமில் 1.1 சதவீதம், கேரளாவில் 0.5 சதவீதம் என உள்ளது. இந்த அளவிலான வாக்குகளை சம்பந்தப்பட்ட மாநிலங்களில் சில முக்கிய கட்சிகளும் பெற்றுள்ளன. எனவே இந்த தேர்தல்களில் நோட்டா வாக்குகள் அதிகம் என கருதப்படுகிறது.

இது குறித்து ‘தி இந்து’விடம் மத்திய தேர்தல் ஆணைய அதிகாரி கள் வட்டாரம் கூறும்போது, “கடந்த 2014-ல் நடந்த மக்களவை தேர்தலில் மேற்கு வங்கத்தில் நோட்டா வாக்குகள் 1 சதவீதம் பதிவாகின. இது இம்முறை அதி கரித்துள்ளதற்கு இளம் தலை முறையினர் காரணமாக இருக்க லாம். இவர்களுக்கு அரசியல் வாதிகளிடம் நம்பிக்கை குறைந்து வருவதாக பொதுவான ஒரு கருத்து உள்ளது. இதற்கு வேலை வாய்ப்பை உறுதிசெய்யும் வகை யிலான திட்டங்களை அரசியல் கட்சிகள் அறிவிப்பது அவசியம்” என்று தெரிவித்தனர்.

கடந்த 2013, செப்டம்பர் 27-ல் உச்ச நீதிமன்றம் ஒரு பொதுநல வழக்கில் அளித்த தீர்ப்பில் தேர்தல் ஆணையத்துக்கு ஓர் உத்தரவை பிறப்பித்தது. தேர்தலில் வேட் பாளர்கள் யாருக்கும் வாக்களிக்க விரும்பாத வாக்காளர்களுக்கு நோட்டா வசதி ஏற்படுத்த வேண் டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

இதன்படி வாக்குப்பதிவு இயந் திரங்களில் நோட்டா பொத்தானை அறிமுகப்படுத்தும் உத்தரவை தேர்தல் ஆணையம் கடந்த 2013 அக்டோபரில் வெளியிட்டது. இந்த வசதி தமிழகத்தில் அதே ஆண்டு நடைபெற்ற ஏற்காடு இடைத்தேர் தலில் அறிமுகம் செய்யப்பட்டது.

நோட்டா அதிகரித்துள்ளதற்கு இளம் தலைமுறையினர் காரணமாக இருக்கலாம். இவர்களுக்கு அரசியல் வாதிகளிடம் நம்பிக்கை குறைந்து வருவதாக ஒரு கருத்து உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE