இந்தியா

கேதார்நாத்தில் ஆதி சங்கரர் சிலை திறப்பு: தியானம் செய்த பிரதமர் மோடி

செய்திப்பிரிவு

உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் ஆதி சங்கரர் சிலையை பிரதமர் மோடி அங்கு இன்று திறந்து வைத்தார்.

உத்தரகண்டில் 2013ல் ஏற்பட்ட வெள்ளத்தின் போது கேதார்நாத் கோயில் சேதம் அடைந்தது. கோயில் அருகே இருந்த ஆதி சங்கரர் சிலை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. கோயில் மற்றும் சமாதியை புனரமைக்கும் பணி 500 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வருகின்றன.


கேதார்நாத் கோயில் அருகே 12 அடி உயரமும் 35 டன் எடையும் உடைய ஆதி சங்கரரின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதனை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். இதற்காக பிரதமர் மோடி உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் சென்றார்.

கேதார்நாத் கோயிலுக்கு சென்ற பிரதமர் மோடி அங்கு சுவாமி தரிசனம் செய்தார்.

பின்னர் வழிபாடுகள் முடிந்துக் கொண்டு அப்பகுதியில் நடைபெறும் பணிகளையும் பார்வையிட்டார்.

பின்னர் உத்தரகண்டின் கேதார்நாத் கோவில் அருகே 12 அடி உயர ஆதி சங்கரர் சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

SCROLL FOR NEXT