நீதி மற்றும் மனிதாபிமானத்துக்குத் தகுதியானவர் ஸ்டேன் சுவாமி: ராகுல் காந்தி இரங்கல்

By செய்திப்பிரிவு

மறைந்த ஸ்டேன் சுவாமி, நீதி மற்றும் மனிதாபிமானத்துக்குத் தகுதியானவர் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

பழங்குடி இன மக்களின் உரிமைப் போராளியும், பாதிரியாருமான ஸ்டேன் சுவாமி இன்று காலமானார். அவருக்கு வயது 84.

பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஸ்டேன் சுவாமி கடந்த மே 29ஆம் தேதியன்று மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு கரோனா தொற்றும் உறுதியானது. இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார்.

இந்த நிலையில் பலரும் ஸ்டேன் சுவாமியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் தனது இரங்கலைப் பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “ஸ்டேன் சுவாமியின் மரணத்துக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நீதி மற்றும் மனிதாபிமானத்துக்குத் தகுதியானவர்” என்றார்.

ஸ்டேன் சுவாமி திருச்சியைப் பூர்வீகமாகக் கொண்டவர். இவர் பழங்குடியினரின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துவந்தார். ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பழங்குடியினரின் உரிமைகளுக்காகப் போராடி வந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE