உத்தராகண்ட் பாஜக முதல்வர் தீரத் சிங் ராவத் ராஜினாமா

By செய்திப்பிரிவு

உத்தரகாண்ட் மாநில பாஜக முதல்வர் திரேந்திர சிங் ராவத் கடந்த மார்ச் மாதம் மாற்றப்பட்டு, புதிய முதல்வராக தீரத் சிங் ராவத் தேர்வு செய்யப்பட்டார். தீரத் சிங் ராவத் தற்போது பவுரி மக்களவைத் தொகுதி எம்.பி.யாக உள்ளார்.

முதல்வராக பதவியேற்றுள்ள நிலையில் அவர் 6 மாதங் களுக்குள் எம்எல்ஏவாகத் தேர்வு செய்யப்பட வேண்டும். வரும் செப்டம்பர் மாதத்துக்குள் அவர் பதவியேற்க வேண்டும். தற்போது கங்கோத்ரி தொகுதியும், ஹால்த் வானி தொகுதியும் காலியாக உள்ளன. இவற்றில் கங்கோத்ரி தொகுதியில் தீரத் சிங் ராவத்தை நிறுத்த கட்சி முடிவு செய்திருந்தது.

ஆனால் அடுத்த ஆண்டு உத்தராகண்ட் சட்டப் பேரவைக்குத் தேர்தல் நடைபெறவுள்ளது. பேரவையின் பதவிக்காலம் முடிவடைய ஓராண்டு மட்டுமே இருக்கும் நிலையில் சட்டப் பேரவை இடைத்தேர்தல் நடத் தப்படுவது இல்லை என்பது விதியாகும்.

எனவே, தீரத் சிங் ராவத்தை ராஜினாமா செய்யுமாறு கட்சி மேலிடம் கேட்டுக் கொண்டதாகத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து நேற்று அவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமா கடிதம் வந்துள்ளதாக கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவும் உறுதி செய்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இன்றோ அல்லது நாளையோ சட்டப்பேரவை பாஜக எம்எல்ஏக் கள் கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தின் போது புதிய முதல்வர் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே மாநில ஆளுநர் பேபி ராணி மவுர்யாவை சந்திக்கு மாறு மாநில முதல்வர் தீரத் சிங் ராவத்துக்கு கட்சி மேலிடம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

49 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

உலகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்