கேரளாவில் ஜூன்.9 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை முதல்வர் பினராயி விஜயன் இன்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது வெளியிட்டார்.
கேரளாவில் இரண்டாவது முறையாக கடந்த மே 16ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில் 3வது முறையாக மே 23 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.
தொடர் ஊரடங்கால் மாநிலத்தில் கரோனா பரவல் எண்ணிக்கை கட்டுக்குள் வரத்தொடங்கியது. இந்நிலையில், மீண்டும் வரும் ஜூன் 9ம் தேதி வரை கரோனா ஊரடங்கை நீட்டித்து முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து 4 முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது.
அதேவேளையில், மலப்புரம் மாவட்டத்தில் மிகமிகக் கடுமையான ஊரடங்கு (ட்ரிப்பிள் லாக்டவுன்) விதிக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அங்கும் மற்ற மாவட்டங்களைப் போல் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,318 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.