இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு: முதலிடத்தில் தமிழகம்

By செய்திப்பிரிவு

கடந்த 24 மணி நேரத்தில், 20 லட்சம் கோவிட் பரிசோதனைகள் செய்து உலக அளவில் இந்தியா சாதனை படைத்துள்ளது.

இந்தியாவில் கோவிட் தொற்றிலிருந்து தினசரி குணமடைபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து 6 வது நாளாக, தினசரி கோவிட் பாதிப்பை விட அதிகமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,89,851 பேர் குணமடைந்துள்ளனர்.

நாட்டில் கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை இன்று 2,19,86,363 எட்டியுள்ளது. இவர்களின் சதவீதம் 86.23 சதவீதமாக உள்ளது.

தொடர்ந்து கடந்த 3 நாட்களாக, தினசரி கோவிட் பாதிப்பு 3 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,67,334 பேருக்கு கோவிட் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களில் 74.46 சதவீதம் பேர் 10 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

நேற்றைய புள்ளி விவரங்களின்படி, தமிழகத்தில் அதிகபட்சமாக 33,059 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்ததாக 2-வது இடத்தில் கேரளாவில் 31,337 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

3-ம் இடத்தில் கர்நாடகா உள்ளது. அங்கு கடந்த 24 மணிநேரத்தில் 30,309 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நான்காவது இடத்தில் உள்ள மகாராஷ்டிராவில் பாதிப்பு எண்ணிக்கை 28,458 ஆக உள்ளது. ஆந்திரா 21,320 பாதிப்புடன் 5-வது இடத்தில் உள்ளது.

அதேசமயம் ஒட்டுமொத்த கரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் மகாராஷ்ரா முதலிடத்தில் உள்ளது. அங்கு புதிய பாதிப்புகள் குறைந்து பழைய நோயாளிகள் குணமடைந்து வருகின்றனர்.

மற்றொருபுறம், நாட்டில் கோவிட் சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று 31,26,719-ஆக குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கை 1,27,046 ஆக குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 20.08 லட்சம் கோவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டன. இது நாட்டில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட கோவிட் பரிசோதனையில் மிக அதிக அளவு மற்றும் உலக சாதனையாகும். நாட்டில் இதுவரை 32 கோடிக்கும் மேற்பட்ட கோவிட் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நாட்டில் போடப்பட்ட கோவிட் தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை இன்று 18.58 கோடியை கடந்து விட்டது. இன்று காலை 7 மணி வரை 27,10,934 முகாம்கள் மூலம் 18,58,09,302 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

8 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்