இந்தியா

16.69 கோடி தடுப்பூசிகள்: மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கியது மத்திய அரசு

செய்திப்பிரிவு

மத்திய அரசு இதுவரை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், சுமார் 16.69 கோடி தடுப்பூசி டோஸ்களை (16,69,97,410) இலவசமாக அளித்துள்ளது.

கோவிட்-19 தடுப்பூசி போடும் திட்டத்தின் மூன்றாவது கட்டத்தில், 18 வயது முதல் 44 வயது வரையிலான புதிய பயனாளிகள் கடந்த மாதம் 28-ந் தேதி முதல் பதிவு செய்யத் தொடங்கியுள்ளனர். இவர்கள் கோவின் (cowin.gov.in) இணையதளத்திலோ, ஆரோக்கிய சேது செயலி வாயிலாகவோ, நேரடியாக பதிவு செய்து கொள்ளலாம்.

மத்திய அரசு இதுவரை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், சுமார் 16.69 கோடி தடுப்பூசி டோஸ்களை (16,69,97,410) இலவசமாக அளித்துள்ளது. இதில் வீணாக்கப்பட்டவை உள்ளிட்ட மொத்தம் 15,94,75,507 டோஸ்கள் (இன்று காலை 8 மணி நிலவரம்) பயனாளிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளன.

75,24,903 கோவிட் தடுப்பூசி டோஸ்கள் இன்னும் மாநிலங்களிடமும், யூனியன் பிரதேசங்களிடமும் கையிருப்பில் உள்ளன.

அடுத்த மூன்று நாட்களில், 48 லட்சத்திற்கும் (48,41,670) அதிகமான தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் கூடுதலாக வழங்கப்பட உள்ளன.

SCROLL FOR NEXT