கரோனாவுக்கு ஊரடங்கு தீர்வல்ல, தடுப்பு மருந்தே தீர்வு என்று டெல்லி துணை முதல்வர் சிசோடியா தெரிவித்துள்ளர்.
டெல்லி மவுலானா ஆசாத் மருத்துவமனையில் கரோனா தடுப்பு மருந்தை செலுத்தக் கொண்ட அவர் இதனை கூறியிருக்கிறார். அவருடன் அவரது குடும்பத்தினருக்கும் கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது.
கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டது குறித்து சிசோடியா கூறும்போது, “கரோனாவை கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்கு தீர்வல்ல, தடுப்பு மருந்துகளே தீர்வு. நாம் கரோனா வைரஸ் பரவும் சங்கிலி தொடர்ப்பை தடுக்க வேண்டும். இது மட்டுமே ஒரே தீர்வு.எனவே கரோனாவுக்கு ஊரடங்கு தீர்வல்ல, தடுப்பு மருந்துகளே தீர்வு.
45 வயதுக்கு மேலான அனைவருக்கு கரோனா தடுப்பு மருந்தை செலுத்த அனுமதி அளித்ததுபோல, அனைத்து வயதினருக்கும் கரோனா தடுப்பு மருந்தை செலுத்த மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். மத்திய அரசு அனுமதித்தால் விரைவில் நாங்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பு மருந்து செலுத்தும் பணியை தொடங்குவோம்.
உலகெங்கிலும் கரோனா இரண்டாம் மற்றும் மூன்றாவது அலை பரவும்போது அனைவருக்கும் கரோனா தடுப்பு மருந்தை செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாம் கரோனா சங்கிலியை உடைக்க வேண்டும். இதற்கு தடுப்பூசி, மற்று பரிசோதனைகளை அதிகரித்தல் மட்டுமே தீர்வு” என்று தெரிவித்துள்ளார்.