இந்தியா

அயோத்தி ராமர் கோயில்; நன்கொடையாக வந்த 2000 காசோலைகள் பணமில்லாமல் திரும்பின

ஆர்.ஷபிமுன்னா

அயோத்தியின் ராமர் கோயிலுக்காக நன்கொடை அளிக்கப்பட்ட 2000 காசோலைகள் அதன் கணக்குகளில் பணமில்லாமல் திரும்பி விட்டன. மேலும், 6000 காசோலைகளில் எழுத்துப்பிழை உள்ளிட்ட கோளாறுகளினால் சிக்கியுள்ளன.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிக்காக ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை அமைக்கபப்ட்டுள்ளது. இதன் சார்பில் நாடு முழுவதிலும் நன்கொடைகள் வசூலிக்கப்படுகின்றன.

இதற்காக நன்கொடைகள் வசூலிக்கும் 44 நாள் பணி தற்போது தீவிரமாக நடைபெறுகிறது. இதில் பஞ்சாப் தேசிய வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் பாங்கி ஆப் பரோடா ஆகிய வங்கிகளின் கணக்குகளில் இருந்து வந்த சுமார் 2000 காசோலைகள் திரும்பி உள்ளன.

இந்த காசோலைகளை அளித்தவர்கள் வங்கிக் கணக்குகளில் பணம் இல்லாமையால் அவை அறக்கட்டளைக்கே திரும்பி வந்துள்ளன. இதேபோல், சுமார் 6000 காசோலைகளில் பல்வேறு குறைகளால் பணமாக்கப்படாமல் வங்கியில் சிக்கியுள்ளன.

இவற்றின் பல காசோலைகளின் பின்புறம் அதை அளித்தவரின் கைப்பேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளன. இதன் உதவியால் அறக்கட்டளையின் வங்கி அலுவலர்கள் அவர்களிடம் பேசி வருகின்றனர்.

இவற்றில் மேலும் அதிக எண்ணிகையிலான காசோலைகள் வந்த தபால்களும் பணிச்சுமையால் இன்னும் பிரிக்கப்படாமல் இருப்பதாகத் தெரிகிறது. கடந்த மகரசங்ராந்தி வந்த ஜனவரி 14 முதல் துவக்கப்பட்ட ராமர் கோயிலுக்கான வசூலில் இதுவரை, ரூ.2000 கோடிகளுக்கும் அதிகமாகக் கிடைத்துள்ளது.

SCROLL FOR NEXT