மார்ச் முதல் மே வரை வெயில் எப்படி?- இந்திய வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன?

By செய்திப்பிரிவு

இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் மார்ச் மாதத்திலேயே கோடை வெயில் தலைகாட்டத் தொடங்கிவிடும். ஏப்ரல், மே மாதங்களில் வட இந்தியாவை வெயில் வாட்டிவதைக்கும். வெயிலினால் உயிரிழப்புகள் ஏற்படும் அளவுக்குக் கூட பாதிப்புகள் எட்டிப்பார்க்கும்.

இந்நிலையில், மார்ச் மாதம் தொடங்கி மே மாத இறுதி வரை வெயில் நிலவரம் எப்படி இருக்கும் என்பது குறித்து இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் (IMD) விரிவான முன்னறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி, வடக்கு, வடகிழக்கு, மேற்கு மாநிலங்களில் பகல் நேரங்களில் வழக்கத்தைவிட வெயில் சற்று கடுமையாக இருக்குமென்றும், தென்னிந்தியாவில், மத்திய பகுதியிலும் சற்று குறைவாகவே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் அறிக்கையின் முழு விவரம் வருமாறு:

* மார்ச் முதல் மே மாதம் வரை வடக்கு, வடமேற்கு, வடகிழக்கு இந்தியா, மத்திய இந்தியாவின் கிழக்கு, மேற்கு பகுதிகளிலும் வழக்கமாக வெயில் காலத்தில் பதிவாகக்கூடியதைக் காட்டிலும் சற்று அதிகமான வெப்பம் நிலவக்கூடம்.

* சத்தீஸ்கர், ஒடிசா, குஜராத், கரையோர மகாராஷ்டிரா, கோவா, ஆந்திரப் பிரதேச மாநிலங்களிலும் வழக்கத்தைவிட அதிகமான வெப்பமே நிலவும்.

* ஹரியாணா, சண்டிகர், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் வழக்கத்தைவிட அதிக வெப்பம் நிலவ 60% அதிக வாய்ப்புள்ளது. சத்தீஸ்கர், ஒடிசாவில் வழக்கத்தைவிட 75% அதிகமான வெப்பநிலை நிலவலாம்.

மொத்தத்தில் , மார்ச் மே காலகட்டத்தில் பஞ்சாப், ஹரியாணா, சண்டிகர், டெல்லி, கிழக்கு உ.பி., மேற்கு உ.பி., சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஒடிசா மாநிலங்களில் வழக்கத்தைவிட 0.5 டிகிரி செல்சியஸ் கூடுதல் வெப்பம் பதிவாகும் என இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநர் மிருதஞ்சய் மொஹபத்ரா தெரிவித்துள்ளார்.

தென் இந்தியாவில் சில பகுதிகளில் சற்றே ஆறுதல் அளிக்கும் வகையில், கோடை கால வழக்கமான வெப்பநிலையைவிட குறைவாகவே பதிவாகலாம் எனக கூறப்பட்டுள்ளது.

அதேபோல், பசிபிக் கடற்பகுதியில் மிதமான லா-நினா தாக்கம் இருப்பதாகவும் ஐஎம்டி கணித்துள்ளது. இது வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்போது சற்றே தீவிரமடையும் என்றும் தெரிவித்துள்ளது. லா-நினா நிகழ்வின்போது, மேற்பரப்பிலுள்ள கடல்நீரின் சராசரி வெப்பநிலை குறைவாக இருக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

20 mins ago

ஜோதிடம்

35 mins ago

ஜோதிடம்

50 mins ago

ஜோதிடம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுலா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்