முன்னாள் தலைமை நீதிபதிக்கு எதிராக அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி மறுப்பு

By செய்திப்பிரிவு

கடந்த 2018 அக்டோபர் முதல் 2019 நவம்பர் வரை உச்ச நீதிமன்றத்தின் 46-வது தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோய் பதவி வகித்தார். ரஃபேல், அயோத்தி உள்ளிட்ட பல்வேறு முக்கிய வழக்குகளில் அவரது தலைமையிலான அமர்வு தீர்ப்புகளை வழங்கியுள்ளது. தற்போது மாநிலங்களவை எம்.பி.யாக ரஞ்சன் கோகோய் பதவி வகிக்கிறார்.

தனியார் தொலைக்காட்சிக்கு அண்மையில் அவர் அளித்த பேட்டியில் நீதித் துறைக்கு எதிராக கருத்துகளை கூறியதாக சமூக ஆர்வலர் சாகேத் கோகலே குற்றம் சாட்டியுள்ளார்.

"வலுவான பொருளாதாரத்தை உருவாக்க விரும்புகிறோம். அதேநேரம் நீதித் துறை பலவீனமாக உள்ளது. நீதித் துறையின் செயல்பாடு திருப்தி கரமாக இல்லை. கார்ப்ப ரேட் நிறுவனங்கள் மட்டுமே நீதி மன்றங்களை நாட முடிகிறது. அதிகாரிகளை நியமனம் செய்வது போல நீதிபதிகளை நியமனம் செய்ய கூடாது என்பன உள்ளிட்ட கருத்துகளை ரஞ்சன் கோகோய் கூறியுள்ளார்.

அவர் மீது நீதிமன்ற அவ மதிப்பு வழக்கு தொடர அனு மதிக்க வேண்டும் என்று அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணு கோபாலிடம் சமூக ஆர்வலர் சாகேத் கோகலே மனு அளித்தார்.

இந்த மனுவை பரிசீலித்த அட்டர்னி ஜெனரல் வேணு கோபால், முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி மறுத்துள்ளார்.

இதுகுறித்து அட்டர்னி ஜெனரல் அளித்துள்ள விளக்கத்தில், "ரஞ்சன் கோகோயின் பேட்டி வீடியோவை முழுமையாக பார்த்தேன். நீதித் துறையின் நலன்களை கருத்தில் கொண்டே அவர் அறிவுரைகளை கூறியுள்ளார். அவரது வார்த்தைகள் கடுமையாக இருந்தாலும் நீதித் துறையின் மாண்புக்கு எந்த வகையிலும் களங்கம் ஏற்படுத்தவில்லை. அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டிய அவசியம் இல்லை" என்று அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE