உ.பி.யின் லக்னோ பல்கலை.யில் தமிழில் முனைவர் பட்டப்படிப்பு அறிவிப்பு

உ.பி.யின் தலைநகரான லக்னோ வில் அமைந்துள்ளது லக்னோ பல்கலைக்கழகம். இது, அப்பகுதி அமைந்துள்ள மகம் முதாபாத்தின் ராஜா சர் முகம்மது அலி கான் முகம்மது கான் என்பவரின் முயற்சி யாலும், உ.பி.யின் துணைநிலை ஆளுநராக பதவி அமர்ந்த சர் ஹர்கோட் பட்லர் என்ற ஆங்கிலேய ரால் கடந்த 1921-ம் ஆண்டு, ஜுலை 17-ம் தேதி தொடங்கப்பட்டது.

இங்குள்ள இந்தி மற்றும் நவீன மொழிகள் துறையில் பல்வேறு மொழிகளுடன் சுமார் 20 ஆண்டு களாக தமிழும் போதிக்கப்பட்டு வருகிறது. இதற்கான சான்றிதழ் மற்றும் டிப்ளமோ கல்வியுடன் இந்த ஆண்டு முதல் முறையாக தமிழில் முனைவர் பட்டப்படிப்பும் அறிமுகப்படுத்த முடிவு செய்யப் பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு அப் பல்கலைக்கழகத்தின் இணை யதளத்தில் தற்போது ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இப்பல்கலைகழக பதிவாளர் டாக்டர்.அகிலேஷ் மிஸ்ராவின் அறிவிப்பின்படி, செப்டம்பர் 9 முதல் விண்ணப்பதாரர்கள் இப்பல்கலை.யின் இணையதளத்தில் தங்கள் பெயர்களைப் பதிவுசெய்யலாம். இதில் தங்கள் படத்துடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய கடைசி தேதி செப்டம்பர் 24 என தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதற்கான கல்வித் தகுதி, தமிழ் முதுகலைப் பட்டப் படிப்பில் 55 சதவீத மதிப்பெண் களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இவர்கள், நுழைவுத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு களின் கீழ் சேர்த்துக் கொள்ளப் படுவார்கள். இந்த விண்ணப்பப் படிவத்துக்கான கட்டணம் ரூ.1500 ஆகும்.

இப்பல்கலைகழகத்தின் உதவி பேராசிரியர் ஏ.செந்தில்குமார் ‘தி இந்து’விடம் கூறும்போது, “உ.பி. மாநில பல்கலைக்கழக விதிமுறைகளின்படி, தொடர்ந்து 5 ஆண்டுகள் பணியாற்றும் ஆசிரியர் கள், அதிகபட்சமாக நான்கு மாணவர்களுக்கு ஆய்வுப் படிப்புக் கான நெறியாளராக இருக்கலாம். எனவே இதை நான் எடுத்துக்கூறி இந்த ஆண்டு முதன் முறையாக தமிழில் ஆய்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இங்கு பயில்வதால் இந்தி மொழியை எளிதாகக் கற்றுக் கொள்வதுடன், வடஇந்திய பல்கலைக்கழகங்களில் பணியாற்றி தமிழை வளர்க்க வாய்ப்பாக அமையும்” என்றார்.

வடமாநிலங்களில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களான அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகம், பனாரஸ் இந்து பல்கலைக் கழகம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தமிழில் முனைவர் பட்டம் வரைக் கான கல்வி பல ஆண்டுகளாக போதிக்கப்பட்டு வருகிறது.

பஞ்சாப், உ.பி.யின் ஆக்ரா, மீரட், அலகாபாத் உள்ளிட்ட சில மாநில அரசு பல்கலைகழகங்களில் மாணவர்கள் படிக்க முன்வராத தால், இந்த படிப்புகள் மூடப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் லக்னோ பல்கலைக்கழகத்தில் நீண்ட காலத் துக்குப் பின் முதன்முறையாக தமிழில் முனைவர் படிப்புக்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கப் பட்டுள்ளது. இதன் இணையதள முகவரி http://www.lkouniv.ac.in ஆகும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE