ஒத்திகைப் பார்த்து, முன்தயாரிக்கப்பட்ட உரையை அப்படியே ஒப்பிக்கிறார்: பிரதமர் மோடி மீது இளைஞர் காங்கிரஸ் விமர்சனம்

நாட்டுமக்களுக்குப் பிரதமர் செவ்வாயன்று உரையை நிகழ்த்தினார். அதில் கரோனா ஊரடங்கு தளர்வு கால மக்கள் நடத்தை பற்றியும் ஏழைமக்களுக்கான இலவச உணவு வழங்கல் நவம்பர் வரை நீட்டிக்கப்படுவதாகவும் பேசினார். இந்நிலையில் இந்திய இளைஞர் காங்கிரஸ் மோடி பேச்சின் மீது விமர்சனம் வைத்தது.

இந்தியா-சீனா எல்லைப் பிரச்சினை, எரிபொருள் விலை உயர்வு, பொருளாதாரம் சரிவைச் சந்தித்து வருவது, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பின்மை என்று எதைப்பற்றியும் மோடி பேசமாட்டார் என்று கூறியுள்ளது இந்திய இளைஞர் காங்கிரஸ்.

“எதிர்பார்த்தது போலவே சீனா பற்றி பேசவில்லை. ஏன்? சீனாவுடனான தகராறு குறித்து எதுவும் இல்லை, எரிபொருள் விலை உயர்வு பற்றி எதுவும் இல்லை. வர்த்தகங்கள் சரிவு கண்டு வருவது பற்றி ஒரு வார்த்தையில்லை. இளைஞர்கள் வேலையின்றி தவிப்பது பற்றி ஒன்றும் இல்லை. மோடிஜி வந்தார், ஏற்கெனவே ஒத்திகை பார்க்கப்பட்ட, முன் தயாரித்த உரையை அப்படியே ஒப்பித்து விட்டுச் சென்றார்.” என்று தன் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

59 சீன செயலிகள் தடை பற்றி கூறும்போது, “அவர்கள்தான் இந்திய பகுதிக்குள் நுழையவே இல்லை என்றாரே பிரதமர் பின் எதற்கு இந்தத் தடை?” என்று கேள்வி எழுப்பினர். இப்போது உண்மையைக் கூறுங்கள்” என்று இந்திய இளைஞர் காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE