கரோனா வைரஸ் பாதிப்பு: இந்தியாவில் எண்ணிக்கை 147 ஆக உயர்வு

By செய்திப்பிரிவு

இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 147 ஆக உயர்ந்துள்ளது.

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் கரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. இதனை தடுக்க மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

எனினும் கரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மெல்ல உயர்ந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி இந்தியாவில் கரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 147 ஆக உயர்ந்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை இதனை அதிகாரபூர்வமாக அதிகரித்துள்ளது.


இதில் மகாராஷ்டிராவில் அதிகபட்மாக 41 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக கேரளாவில் 27 பேரும், உத்தர பிரதேசத்தில் 16 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஹரியாணா மாநிலத்தில் 16 பேரும் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களி்ல 14 பேர் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆவர்.

டெல்லியில் 10 பேரும்,கர்நாடகாவில் 11 பேரும், தெலங்கானாவில் 5 பேரும், லடாக்கில் 8 பேரும், ஜம்மு காஷ்மீரில் 3 பேரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தானில் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதைத்தவிர தமிழகம், ஆந்திரா, ஒடிசா, உத்தரகண்ட், பஞ்சாப், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

48 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

க்ரைம்

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

சுற்றுலா

5 hours ago

மேலும்