வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்துவது குறித்து மத்திய அமைச்சர்கள் குழு அவசர ஆலோசனை

வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்துவது குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் மத்திய அமைச்சர்கள் குழு டெல்லியில் நேற்று அவசர ஆலோசனை நடத்தியது.

மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக வெங்காய பயிர்கள் அழு கின. இதனால் வெங்காய உற்பத்தி குறைந்திருப்பதால் நாடு முழுவ தும் வெங்காயத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

விலை உயர்வைக் கட்டுப் படுத்த துருக்கி, எகிப்தில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த வெங்காயம் ஜனவரி மத்தி யில் இந்தியா வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆப்கானிஸ்தானில் இருந்து பஞ்சாப் மாநிலம் அட்டாரி-வாகா எல்லை வழியாக நாள்தோறும் 15 லாரிகளில் வெங்காயம் கொண்டு வரப்படுகிறது.

மேலும் மொத்த வியாபாரிகள் வெங்காயத்தை பதுக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் கூறும்போது ‘‘மொத்த வியாபாரிகள் 25 மெட்ரிக் டன்னும், சில்லறை வியாபாரிகள் 5 மெட்ரிக் டன்னும் மட்டுமே இருப்பு வைத்துக் கொள்ளலாம். அதற்கு மேல் இருப்பு வைத்திருந்தால் சட் டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்துவது குறித்து மத்திய உள்துறை அமைச் சர் அமித் ஷா தலைமையில் டெல் லியில் நேற்று மத்திய அமைச்சர் கள் குழு அவசர ஆலோசனை நடத்தியது.

இதில் ரயில்வே அமைச் சர் பியூஷ் கோயல், வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், கேபினட் செயலாளர் ராஜீவ் கவுபா, பிரதமரின் ஆலோசகர் பி.கே. சின்ஹா உள்ளிட்டோர் பங்கேற் றனர். வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யும் பணிகளை விரைவுபடுத்துவது குறித்தும் வெங்காயம் பதுக்கலை தடுக்க நடவடிக்கை எடுப்பது குறித்தும் கூட்டத்தில் விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE