125 சுங்கச் சாவடிகள் இம்மாத இறுதியில் மூடப்படும்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலைகளில் செயல்பட்டு வரும் 125 சுங்கச் சாவடிகள் இந்த மாத இறுதியில் மூடப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி கூறும்போது, “பொதுமக்க ளின் சுமையைக் குறைக்கும் வகை யில், நாடு முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகளில் 60 சாவடிகளில் சுங்க வரி வசூலிப்பது நிறுத்தப்பட்டுள் ளது. இந்த மாத இறுதியில் மேலும் 125 சாவடிகள் மூடப்படும்.

மேலும் இனிமேல் ரூ.50 கோடிக் கும் குறைவான திட்ட மதிப்பீடு கொண்ட சாலை கட்டுமான திட்டங் கள் நிறைவேற்றப்படும் பகுதிகளில் சுங்க வரி வசூலிப்பதில்லை என்று அரசு முடிவு செய்துள்ளது” என்றார். இந்திய போக்குவரத்துக் கழகம்-ஐஐஎம் (கொல்கத்தா) ஆகியவை இணைந்து ஓர் ஆய்வு நடத்தியது. அதில், “சுங்கச் சாவடி சோதனை மையங்களில் ஏற்படும் காலதாமதம் காரணமாக ரூ.60 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுகிறது. மின்னணு சுங்க வரி வசூலிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டிருப் பதன் மூலம் ரூ.88 ஆயிரம் கோடி யையும் நேரத்தையும் மிச்சப்படுத்த முடியும் என அமைச்சர் கட்கரி தெரிவித்துள்ளார்” என கூறப்பட் டுள்ளது.

மும்பை-டெல்லி இடையிலான வழித்தடத்தில் உள்ள 350 சுங்கச் சாவடிகளில் 140-ல் மின்னணு முறை செயல்பாட்டுக்கு வந்துள்ளது. விரைவில் அனைத்து சாவடிகளி லும் இந்த முறை அறிமுகம் செய் யப்படும்.

மின்னணு சுங்க வரி வசூல் முறையை அமல்படுத்துவதற்காக புதிதாக இந்திய நெடுஞ்சாலை மேலாண்மை நிறுவனம் உருவாக் கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் சுங்க வரியை வசூலிக்கும். அத்துடன் சாலை திட்டங்களை நிர்வாக, சட்ட, தொழில்நுட்ப மற்றும் வர்த்தக ரீதியாக நிர்வகிக்கும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE