ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய கர்நாடக நீதிபதி கைது: லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை

By இரா.வினோத்

கர்நாடக மாநிலம் பீதர் மாவட்ட சிவில் நீதிமன்ற நீதிபதி சரவணப்பா சஜ்ஜன், வழக்கொன்றில் ஒரு வருக்கு சாதகமாக நடந்துகொள் வதற்காக ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கியதால் கைது செய்யப்பட் டுள்ளார்.

இது தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்ற நீதித்துறை பதிவாளர் பி.ஏ.பாட்டில் நேற்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பீதர் மாவட்டத்தில் உள்ள பசவகல்யாண் சிவில் நீதிமன்றத் தில் சரவணப்பா சஜ்ஜன் மூத்த நீதிபதியாக பொறுப்பு வகிக்கிறார். இவர் கடந்த செவ்வாய்க்கிழமை வழக்கு தொடர்பாக சம்பந்தப்பட்ட வரிடம் ரூ.5 லட்சம் பெற்றுள்ளார்.

லஞ்சம்பெறும்போது கர்நாடக உயர் நீதிமன்ற லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அவரை கையும் களவுமாக பிடித்துள்ளன‌ர். தனது குற்றத்தை நீதிபதி சரவணப்பா சஜ்ஜன் ஒப்புக்கொண்டுள்ளார். அவர் காவல்துறையிடம் ஒப்படைக் கப்பட்டார். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாலை 4 மணிக்கு லஞ்சம்

நீதிபதி சரவணப்பா சஜ்ஜன் மீது லஞ்ச புகார் அளித்த காசிநாத் என்பவர் கூறியதாவது:

பீதர் மாவட்டம் ஹூல்சூரில் உள்ள  குருபசவேஷ்வரா கல்வி அறக்கட்டளைக்கு 1995-ம் ஆண்டு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட் டேன். எனது பதவி காலம் முடிவதற் குள்  பசவேஷ்வரா மடத்தை சேர்ந்தவர்கள் என்னை அப்பதவி யில் இருந்து வெளியேற்றினர். இதனால் எனக்கு ரூ.20 லட்சம் நஷ்டம் ஏற்பட்டது.

இந்நிலையில் எனது பதவி காலம் முடிவதற்குள் வெளியேற்றியதால் ஏற்பட்ட ரூ. 20 லட்சம் நஷ்டத்தை திருப்பி தருமாறு கேட்டேன். அதற்கு  பசவேஷ்வரா கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள் என் னிடம் ரூ.30 லட்ச ரூபாயை வட்டி யுடன் செலுத்துமாறு மிரட்டினர். இது தொடர்பாக கடந்த 2000-வது ஆண்டில் வழக்கு தொடர்ந்தேன்.

கடந்த 14 ஆண்டுகளாக தீர்ப்பு வெளியாகவில்லை. விரைவில் தீர்ப்பு வழங்க வேண்டுமானால் ரூ. 5 லட்சம் தருமாறு நீதிபதி சரவணப்பா சஜ்ஜன் லஞ்சம் கேட் டார். இதுகுறித்து கர்நாடக உயர்நீதி மன்ற லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி களுக்கு தகவல் கொடுத்தேன்.

அதனைத் தொடர்ந்து நீதிபதி சரவணப்பா சஜ்ஜன் கூறியவாறு கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணியளவில் பீதர் பசவண்ணா சிலைக்கு அருகே சென்றேன். அங்கு காத்திருந்த நீதிபதி சரவணப்பா என்னிடம் ரூ. 5 லட்சம் லஞ்சமாக பெற்றார். லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், அவரை சம்பவ இடத்திலே கைது செய்தனர்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

15 mins ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்