வெளிநாடுவாழ் இந்தியர்கள் மாநாடு: பெங்களூருவில் நாளை தொடக்கம்

கர்நாடக தலைநகர் பெங்களூரு வில் 14-வது வெளிநாடுவாழ் இந்தியர்கள் மாநாடு ‘பிரவாசி பாரதிய திவஸ்’ நாளை தொடங்கி 9-ம் தேதி வரை நடைபெறுகிறது.

முதல்நாள் இளைஞர்கள் மாநாட்டை வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தொடங்கி வைக்க உள்ளார். இரண் டாம் நாள் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக் கிறார். நிறைவு நாள் மாநாட்டில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பங்கேற்கிறார்.

உலகம் முழுவதும் இருந்து 2,500 வெளிநாட்டு வாழ் இந்தி யர்கள் மாநாட்டில் கலந்து கொள் கின்றனர். வெளியுறவுத் துறை இணை அமைச்சர்கள் வி.கே. சிங், அக்பர், கர்நாடக முதல்வர் சித்தராமையா, சத்தீஸ்கர் முதல்வர் ரமண் சிங், மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங், அசாம் முதல்வர் சர்பானந்தா உள்ளிட் டோரும் பங்கேற்கின்றனர்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுரினாம் நாட்டின் துணை அதிபர் மைக்கேல் அஸ்வின் சத்தியந்திரே அதின், போர்ச் சுகல் பிரதமர் அந்தோனியோ கொஸ்தா ஆகியோர் மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கிறார்கள். பெங்களூரு மாநாட்டின்போது இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளியினர் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட உள்ளன.

‘இந்திய பல்கலைக்கழகங் களில் இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மாணவர்களுக்கு அனு மதி வழங்க வேண்டும், தமிழர் கலாச்சார மரபுகளை இனங்கண்டு கொள்ள ஒரு கலாச்சார மரபுரிமை கிராமத்தை ஏற்படுத்த இந்திய அரசு உதவ வேண்டும்’ என்று வீரகேசரி பத்திரிகை நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி குமார் நடேசன் கோரிக்கை வைத் துள்ளார்.

‘பல்வேறு துறைகளில் சாதனை படைக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ‘பிரவாசி பாரதிய சம்மான்’ விருது வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் இலங்கையைச் சேர்ந்த ஒருவருக்காவது இந்த விருதை வழங்க வேண்டும்’ என்று முன்னாள் அமைச்சரும் மலையக மக்கள் முன்னணி தலைவருமான பெரியசாமி சந்திரசேகரன், தற் போதைய தலைவர் வீ.ராதா கிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் பிரபா கணேசன் ஆகியோர் வலி யுறுத்தியுள்ளனர்.

மத்தியில் தற்போது ஆளும் பாஜக அரசு மலையகத்தில் வாழும் இந்திய வம்சாவளி மக்க ளின் நலனில் அதிக அக்கறை காட்ட வேண்டும். மலையக மக்களின் கல்வி மற்றும் சமூக அபிவிருத் தியில் இந்திய அரசு அக்கறை காட்டி வருவது பாராட்டுக்குரியது.

மலையகத்தில் உள்ள டிக்கோயா அரசாங்க வைத்திய சாலை புனரமைப்பு இந்திய அரசின் முக்கிய பங்களிப்பாகும். மலையகத்தில் உள்ள மாணவர் களின் ஆங்கில தேர்ச்சி மேம்பாட்டுக்காகக் கண்டியில் உள்ள இந்திய உதவித் தூதர் ராதா வெங்கடராமன் பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறார்.

இலங்கையில் சுமார் 20,000 இந்திய வம்சாவளியினருக்கு இந்தி யாவின் வெளிநாடு வாழ் இந்திய குடிமகன் உரிமை வழங்கப் பட்டுள்ளது. அத்துடன் மலைய கத்தில் 4000 வீடுகள் கட்டும் திட்டத்தை இந்திய அரசு செயல் படுத்துகிறது.

இலங்கையில் வாழும் 15 லட்சம் இந்திய வம்சாவளி மக்களை, இலங் கைத் தமிழர்களுடன் இணைத்துப் பார்த்து இரு சாராரையும் ஒன்றாக கணிக்க முற்பட்டது இந்திய அரசின் தவறான அணுகுமுறை. இலங் கைத் தமிழர்களின் உரிமைப் போராட்டங்களைப் பெரிதும் மதிக் கின்ற அதேவேளை, மலைய கத்தில் வாழும் இந்திய வம்சாவளி மக்களின் தனித்துவத்தை இந்திய அரசு அங்கீகரிக்க வேண்டும். அத்துடன் உலகம் முழுவதும் வாழும் இந்திய வம்சாவளி மக்களின் நலன்கள் தொடர்பாக ஆக்கப்பூர்வமான கருத்துகளை மாநாட்டில் முன்வைக்க வேண்டும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE