உ.பி. முதல்வருக்கு விவசாயிகள் எச்சரிக்கை

By பிடிஐ

“உ.பி.யில் விவசாயிகளின் பிரச்சினைகளை முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு விரைவாக தீர்க்க வேண்டும். இல்லாவிடில் ம.பி.யில் நடந்தது போன்ற சூழலை எதிர்கொள்ள தயாராக வேண்டும் என்று அம்மாநில விவசாயிகள் சங்கத் தலைவர் ஒருவர் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக ‘ராஷ்ட்ரிய கிசான் மன்ச்’ என்ற அமைப்பினர் தலைவரான சேகர் தீட்சித் கூறும்போது, “கடன் தள்ளுபடி மட்டுமே விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வாகாது. விளைபொருடகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை பெரும்பாலான விவசாயிகள் பெறமுடியவில்லை.

இதுவே அடிப்படை பிரச்சினையாகும். இதுதான் விவசாயிகளை வறுமையில் தள்ளுகிறது. விவசாயம் தொடர்பான முடிவுகளை குளிர்சாதனை அறைகளில் அமர்ந்துகொண்டு எடுத்தால் விவசாயிகளுககு பலன் அளிக்காது. விவசாயிகளின் பிரச்சினைகளை அரசு விரைவாக தீர்க்க வேண்டும். இல்லாவிடில் ம.பி.யில் நடந்தது போன்ற சூழலை எதிர்கொள்ள தயாராக வேண்டும்” என்றார்.

மத்தியபிரதேசத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் 5 விவசாயிகள் இறந்ததை தொடர்ந்து மாநிலம் முழுவதும் வன்முறை வெடித்தது. இதை சுட்டிக்காட்டி சேகர் தீட்சித் இவ்வாறு கூறியுள்ளார்.



VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE